தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த சிம்ரன், திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டவர் ரீ எண்ட்ரியாக சமீபத்தில் நடிக்க தொடங்கினாலும், வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவருக்கு, ரஜினியின் ‘பேட்ட’ பெரும் திருப்பத்தை கொடுத்திருக்கிறது.
ரஜினி எப்படி பேட்ட படத்தில் ரொம்ப இளமையாக இருந்தாரோ, அதை விட கூடுதல் இளையாக இருந்தவர் சிம்ரன் தான். சிம்ரனின் திரும்பிய இளமையை பார்த்த அவரது ரசிகர்கள், தற்போது சிம்ரனுக்காக தனி மன்றங்கள் வைக்க தொடங்கியிருக்கிறார்கள். அதே போல சிம்ரனும், இனி கதை தேர்வில் கவனம் செலுத்துவதோடும், மீண்டும் ஹீரோயினாக நடிப்பதற்கே முதலிடம் கொடுக்கவும் முடிவு செய்துவிட்டாராம்.
அந்த வகையில், தற்போது மாதவனுக்கு ஜோடியாக நடிக்க சிம்ரன் ஒப்பந்தமாகியுள்ளார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் ‘ராக்கெட்ரி : தி நம்பி எபெக்ட்’ படத்தில் நம்பி நாராயணனாக நடிக்கும் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார்.
இந்த படத்தில் நடிப்பதோடு, மாதவனே கதை எழுதி தயாரித்து இயக்கவும் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெ.டி.எஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு...
பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அக்யூஸ்ட்' திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...