அறிமுக நடிகர்கள், இயக்குநர் மற்றும் தொழில்நுடப கலைஞர்களோடு கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘சுப்பிரமணியபுரம்’ என்ற படம் கோலிவுட்டில் மட்டும் இன்றி பாலிவுட் இயக்குநர்களிடலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்படம் வெளியாகி 11 ஆண்டுகள் ஆன, நிலையில் அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும், என்ற எதிர்ப்பார்ப்போடு உருவாகி வருகிறது ‘காதல் முன்னேற்ற கழகம்’.
ப்ளு ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் மலர்க்கொடி முருகன் தயாரிக்கும் இப்படத்தில் ஹீரோவாக இயக்குநரும், நடிகருமான பாண்டியராஜனின் மகன் ப்ரித்விராஜன் நடிக்க, ஹீரோயினாக சாந்தினி நடிக்கிறார். இவர்களுடன் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர்குமார், முனிஸ்ராஜா, அமீர் ஹலோ கந்தசாமி ஆகியோர் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சிவசேனாதிபதி நடிக்கிறார்.
ஹாரிஸ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பி.சி.சிவன் இசையமைக்க, யுகபாரதி, மோகன்ராஜ், உமா சுப்ரமணியம், மாணிக்சத்யா ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். சுரேஷ் அர்ஸ் எடிட்டிங் செய்ய, அசோக்ராஜா நடனம் அமைக்கிறார். அம்ரீன் பக்கர் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார். பிரகதீஸ்வரன் கலையை நிர்மாணிக்க, முத்தையா, விஜயகுமார் ஆகியோர் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறார்கள்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் மாணிக் சத்யா, படம் குறித்து பேசுகையில், “இந்த படம் 1985 களில் நடக்கின்ற கதை. கதாநாயகன் நடிகர் கார்த்திக்கின் தீவிர ரசிகர். அவரைப் போலவே முடியை வளர்த்துக் கொண்டு ரசிகர் மன்றம், அது இது என்று வேலைக்கு போகாமல் அலைந்து கொண்டிருப்பவர். சாந்தினி டீச்சராக இருப்பவர்.
துரோகத்தில் மிக கொடூரமான துரோகமாக கருதப்படுவது நம்பிக்கை துரோகம் தான், அதிலும் நட்புக்குள் நடக்கும் நம்பிக்கை துரோகம் மிக மிக கொடூரமானது. அதை தான் இதில் சொல்லி இருக்கிறோம். யதார்த்தமான கதையாக படம் வளர்ந்திருக்கிறது. கிராமப்புற வாழ்வியலை பதிவிட்டிருக்கிறோம்.
படத்தை பார்த்த பாண்டியராஜன் சார் பாராட்டியதுடன், 15 ந்மிட கிளைமாக்ஸ் காட்சிகள் நெருப்பு மாதிரி இருக்கிறது, என்றார்.
சிவசேனாதிபதி படத்தின் கதைக்கு முதுகெலும்பாய் ட்விஸ்ட் கேரக்டராக ஜொலிக்கிறார். நட்பை வலுவாக சொல்லி இருக்கிறோம்.
படப்பிடிப்பு சென்னை, ஊட்டி, கடலூர் மாவட்டம், திட்டக்குடி, விருத்தாசலம், பெரம்பலூர் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.” என்றார்.
இயக்குநரின் இந்த நம்பிக்கையானப் பேச்சும், படத்தை பாராட்டியவர்களின் பாராட்டும் நிச்சயம் இந்த ‘காதல் முன்னேற்ற கழகம்’ ஒரு ‘சுப்பிரமணியபுரம்’ படத்தை போல கோலிவுட்டை ஹாட்டாக்கிவிடும் என்று புரிகிறது.
2026-ம் ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்ப்பு மிக்க படங்களுல் ஒன்றாகக் கருதப்படும், ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ (Toxic: A Fairytale for Grown-ups), திரைப்படத்தில், கியாரா அத்வானி (Kiara Advani) ஏற்றுள்ள ‘நாடியா’ (Nadia) கதாபாத்திரத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு அதிகாரபூர்வமாக சமீபத்தில் வெளியிட்டது...
உலகம் முழுவதும் உள்ள படைப்பாளிகளுக்கு நேரடியாக தயாரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை அடையும் வாய்ப்பை உருவாக்கி கொடுக்கும் விதத்தில், ’தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் இன்டர்நேஷனல்’ (The Script Craft International Short Film Festival) என்ற தலைப்பில் குறும்பட போட்டி ஒன்று தொடங்கியுள்ளது...
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...