Latest News :

பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு எதிராக சீரிய ஆரி! - பட விழாவில் பரபரப்பு
Tuesday January-22 2019

ப்ளு ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் மலர்க்கொடி முருகன் தயாரித்திருக்கும் படம் ‘காதல் முன்னேற்ற கழகம்’. ப்ரித்விராஜன் ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில் சாந்தினி ஹீரோயினாக நடித்திருக்கிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு, சிங்கம் புலி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

 

மாணிக் சத்யா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு பி.சி.சிவம் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை பிர்சாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் எழில், பாலாஜி தரணிதரன், நடிகரும், இயக்குநருமான பாண்டியராஜன், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர் ஆரிமற்றும் படக்குழுவினர்கள் அனைவரும் கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஆரி, சிறு படங்களுக்கு ஆதரவாக பேசியதோடு, தற்போது வசூலில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கும் விஸ்வாசம் மற்றும் பேட்ட ஆகிய படங்களுக்கு எதிராக சீரவும் செய்ததால், நிகழ்வில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

 

தொடர்ந்து பேசிய ஆரி, பேட்ட கலெக்‌ஷன் அதிகமா அல்லது விஸ்வாசம் கலெக்‌ஷன் அதிகமா, என்கிற விவாதம் தான் பலமாக நடக்கிறது. அந்த தயாரிப்பாளர்களுக்கு கலெக்‌ஷனில் போட்டி. ஆனால், சினிமாவையே நம்பி பணத்தை போட்ட சிறு படத் தயாரிப்பாளர்கள் தோத்துக்கிட்டே இருக்காங்க, அதற்கு என்ன தீர்வு?

 

சின்ன படங்களை வாழ விடுங்கள் என்று மேடைக்கு மேடை சொல்கிறோமே தவிர அந்த அளவுக்கு ஒரு வார அளவுக்காவது தியேட்டர்கள் கொடுப்பதில்லை, அப்படி தியேட்டர்கள் கிடைத்தாலும் வசூல் கிடைப்பதில்லை, என்று பரபரப்பாக பேசினார்.

Related News

4108

இன்றைய சூழலில் ஒவ்வொரு படத்திற்கும் விமர்சனம் அவசியம் தேவை - நடிகர் உதயா
Saturday July-19 2025

பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அக்யூஸ்ட்' திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...

சீரியல் நடிகர் ஸ்ரீ தேவா நாயகனாக நடிக்கும் ‘வசூல் மன்னன்’!
Friday July-18 2025

முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...

Recent Gallery