கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ வெளியாக உள்ள நிலையில், தனுஷ் வெற்றி மாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ என்ற படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். ஏற்கனவே வெற்றி மாறன் - தனுஷ் கூட்டணியில் ‘வட சென்னை’ வெற்றி பெற்ற நிலையில், இப்படமும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிர்காஷ் இசையமைக்கிறார்.
இந்த நிலையில், மலையாள சினிமாவின் பிரபல நடிகையாக இருப்பவரும், விவாகரத்து பெற்றவருமான மஞ்சு வாரியர், ‘அசுரன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
மலையாள சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த மஞ்சு வாரியர், நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டார். ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், விவாகரத்து பெற்றுவிட்டனர். விவாகரத்துக்கு பிறகு மீண்டும் மஞ்சு வாரியர் நடிக்க தொடங்கியிருக்கிறார்.
ஜெ.டி.எஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு...
பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அக்யூஸ்ட்' திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...