‘சர்கார்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படம் விஜயின் 63 வது படமாக உருவாவதால், ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ‘தளபதி 63’ படத்தின் பஸ்ட் லுக் வெளியீட்டு தேதி குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விஜயின் ‘மெர்சல்’ மற்றும் ‘சர்கார்’ இரண்டு படங்களும் தீபாவளியன்று வெளியானதோடு, படத்தின் பஸ்ட் லுக் விஜயின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதேபோல், ‘தளபதி 63’ படத்தின் பஸ்ட் லுக்கும் விஜயின் பிறந்தநாளன்றே வெளியிட ‘தளபதி 63’ படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...