பிரபு தேவா நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான ‘சார்லி சாப்ளின்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான காயத்ரி ரகுராம், தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து வந்தார். ஹீரோயின் வேடம் கிடைக்காததால், குணச்சித்திர வேடங்களில் நடித்தவர், பிறகு நடன இயக்குநராக பல படங்களில் பணியாற்றினார்.
பிறகு திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தவர், கணவருடனான கருத்து வேறுபாடால் விவாகரத்து பெற்றதோடு, மீண்டும் சினிமாவில் ஈடுபாடு காட்ட தொடங்கினார். அதன்படி, சுமார் 100 க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றியவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார்.
சுமார் 15 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் இருந்தாலும் காயத்ரியை பிக் பாஸ் தான் பிரபலமாக்கியது, என்றால் அது மிகையல்ல. இப்படி பிக் பாஸ் மூலம் பிரபலமான காயத்ரி, தற்போது பல படங்களில் நடித்து வருவதோடு, ஒரு திரைப்படத்தை இயக்கி முடித்தும் விட்டார்.
இந்த நிலையில், தனது இரண்டாவது திருமணம் குறித்து முதல் முறையாக காயத்ரி மனம் திறந்து பேசியுள்ளார்.
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய காயத்ரி, “நான் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள யாரும் தடை போடவில்லை, அது தான் முக்கியம் என்றும் நான் தேடவில்லை. நடந்தால் சந்தோஷம் என்ற மனநிலை இருக்கிறது. எனக்கு குழந்தை இருக்க வேண்டும் என்று ஆசை, அதற்காகவாவது திருமணம் நடக்கணும் பார்ப்போம்.” என்று தெரிவித்திருக்கிறார்.
2026-ம் ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்ப்பு மிக்க படங்களுல் ஒன்றாகக் கருதப்படும், ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ (Toxic: A Fairytale for Grown-ups), திரைப்படத்தில், கியாரா அத்வானி (Kiara Advani) ஏற்றுள்ள ‘நாடியா’ (Nadia) கதாபாத்திரத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு அதிகாரபூர்வமாக சமீபத்தில் வெளியிட்டது...
உலகம் முழுவதும் உள்ள படைப்பாளிகளுக்கு நேரடியாக தயாரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை அடையும் வாய்ப்பை உருவாக்கி கொடுக்கும் விதத்தில், ’தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் இன்டர்நேஷனல்’ (The Script Craft International Short Film Festival) என்ற தலைப்பில் குறும்பட போட்டி ஒன்று தொடங்கியுள்ளது...
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...