தமிழ் சினிமாவில் கடந்த 16 ஆண்டுகளாக வெற்றி இசையமைப்பாளராக வலம் வரும் டி.இமான், தொடர்ந்து பல ஹிட் பாடல்களை கொடுத்து வருவதோடு, பல பாடகர்களையும் அறிமுகப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், கனடா அரசின் டோரொண்டோ பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை தூதுவராக இசையமைப்பாளர் டி.இமான் நியமிக்கப்பட்டிருக்கிறார். தமிழ் இருக்கைக்காக அவர் இசையமைத்த “எங்கும் தமிழ் எதிலும் தமிழ்...”பாடல் தமிழ் கீதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து டி.இமான் கூறுகையில், “கனடாவின் தலைசிறந்த பல்கலைக்கழகமான டோரண்டோ பல்கலைக்கழகம் வழங்கியிருக்கும் இந்த கவுரவம், உலகமெங்கிருக்கும் தமிழர்களின் பெருமையாகவே கருதுகிறேன். கேம்பிரிட்ஜ் ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தை தொடர்ந்து டோரொண்டோ பல்கலைக்கழகமும் "தமிழ்" மொழியை அங்கீகரிப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.” என்றார்.
இப்பெருமைக்குரிய நிகழ்வு தமிழ் இசையமைப்பாளர்களை உலகத்தரதிற்கு கொண்டுசெல்லக் கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...
இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுத்தில், சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள 'ச்சீ ப்பா தூ...
ஜெ.டி.எஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு...