சமுத்திரக்கனி இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற ‘நாடோடிகள்’ படத்தின் தொடர்ச்சியாக ‘நாடோடிகள் 2’ உருவாகி வருகிறது.
சமுத்திக்கனி இயக்கும் இப்படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிக்கிறார். இதில் சசிகுமார், அஞ்சலி ஹீரோ, ஹீரோயினாக நடிக்கிறார்கள். இவர்களுடன் பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். சமுத்திரக்கனி முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.
ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ஜாக்கி கலையை நிர்மாணிக்க யுகபாரதி பாடல்கள் எழுதுகிறார். திலீப் சுப்புராயண் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்க, தினேஷ், ஜான் ஆகியோர் நடனம் அமைக்கின்றனர். சிவசந்திரன் தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்கிறார்.
படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகளில் இருக்கும் இப்படத்தின் இசை விரைவில் வெளியாக இருக்கிறது. அதை தொடர்ந்து படமும் விரைவில் வெளியாக உள்ளது.
நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...
இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுத்தில், சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள 'ச்சீ ப்பா தூ...
ஜெ.டி.எஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு...