ஒரு இரவில் உலக அளவில் பிரபலமானவர்கள் என்ற ஒரு பட்டியல் தயாரித்தால் அதில் மலையாள இளம் நடிகை பிரியா பிரகாஷ் வாரியரின் பெயர் நிச்சயம் இடம் பிடிக்கும். ஆடவில்லை, பாடவில்லை, டப்மாஷ் செய்யவில்லை, தனது கண்ணை லேசாக சிமிட்ட மட்டுமே செய்த இவர், அதனால், இந்தியாவையும் தாண்டி உலக மக்களையும் ஈர்த்துவிட்டார்.
’ஒரு அடார் லவ்’ என்ற படத்தில் நடித்த பிரியா பிரகாஷ் வாரியர், அப்படத்திற்காக எடுக்கப்பட்ட அந்த கண் சிமிட்டும் காட்சி மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானதோடு, அந்த மலையாளப் படமும் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகியிருக்கிறது.
இந்த நிலையில், மலையாளம் மட்டும் இன்றி தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் என்று நான்கு மொழிகளிலும் ‘ஒரு ஆடர் லவ்’ படம் ரிலீஸாக இருக்கிறது. காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் தமிழ் பதிப்பின் இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.

இதில், நடிகை பிரியா பிரகாஷ் வாரியர், நடிகர் ரோஷன், இயக்குநர் ஓமர் லலு, இப்படத்தின் தமிழ் பதிப்பை வெளியிடும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் படம் குறித்து பேசிய பிரியா பிரகாஷ் வாரியரிடம், உங்களுக்கு வாழ்க்கையில் காதல் அனுபவம் உண்டா? என்று கேட்டதற்கு, “காதலிக்காதவர்கள் யார்? அனைவரும் காதலிக்கிறார்கள்” என்று மழுப்பியவர் பிறகு, “எஸ், நான் காதலித்திருக்கிறேன்” என்று ஒப்புக்கொண்டார்.
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...
Strengthening its commitment to advanced cancer diagnosis and treatment, Iswarya Hospital today inaugurated the Iswarya Cancer Centre at its OMR Taramani facility in Chennai...