நீட் தீர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த அரியலூர் மாவட்ட மாணவி அனிதா தற்கொலை செதுக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மாணவர்கள் பலரது மருத்துவ படிப்பு கனவை சிதைத்துள்ள நீட் என்ற எமனாலும் அனிதா உயிர் பறிக்கப்பட்டதற்கு ஒட்டு மொத்த திரையுலகமே எதிர்ப்பு குரல் கொடுத்து வருவதோடு, ரஜினி, கமல் உள்ளிட்ட பல நடிகர்கள் அனிதாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கிடையே, சமூகவலைதளங்களில் பரபரப்பான கருத்துக்களை தெரிவித்து வரும் நடிகை கஸ்தூரி, மத்திய அரசும் மாநில அரசும் அனிதாவை கொலை செய்துவிட்டதாக, கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இது குறித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், “எதேச்சதிகார மத்திய அரசும் தலையாட்டி பொம்மை மாநில அரசும் சேர்ந்து கொன்னே போட்டுடீங்களேய்யா!!! வயிறு எரிகிறது” என்று தெரிவித்துள்ளார்.
அனிதா தற்கொலைக்கு நடிகர் நடிகைகள் இரங்கல் தெரிவித்து வந்தாலும், நேரடியாக மத்திய மற்றும் மாநில அரசுக்கு எதிர்ப்பு கண்டனம் தெரிவித்ததில் நடிகர் கமல்ஹாசனுக்கு பிறகு, நடிகை கஸ்தூரி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...