ஸ்ருதிஹாசனின் கனவு நிறைவேறியது!
Tuesday January-29 2019

தன்னுடைய 6 வயதில் தொடங்கிய இசை பயணத்தின் மீது கவனத்தை திருப்பியுள்ளார் நடிகை, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவரான ஸ்ருதி ஹாசன்.

 

இதுவரை 100-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் தன்னுடைய திறமையால் மக்களை கவர்ந்த இவர், தன் வாழ்நாள் கனவான லண்டனில் இருக்கும் டரவ்படூர் (Troubadour) எனும் இசைக்கட்சேரி இடத்தலும் சமீபத்தில் பாடினார்.

 

இந்த வருடம் வெளிவர இருக்கும் அவரது சில சிங்கில் டிராக் பாடல்களை அவர் இந்நிகழ்ச்சியில் பாடினார்.

 

உலகின் மிக சிறந்த இசையமைப்பாளர்களில் சிலராக கருதப்படும் பாப் டைலான், எல்டான் ஜான், அட்லே, எட்ஸீரன் போன்றார் " The Troubadour  " எனும் இவ்விடத்தில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பகழ்பெற்ற அரங்கு1954-ல் ஒரு Coffee House-ஆக தொடங்கப்பட்டது. 

 

தி நெட் ( The Ned ) என்ற பெயரில் லண்டனில் உள்ள  இடத்தில் கடந்த வருடம் செப்டம்பரில் நடந்த ஸ்ருதி ஹாசனின் இசை நிகழ்ச்சி சிறப்பான விமர்சனங்களை பெற்றது. 

 

மேலும் நியூ யார்கில் உள்ள மேடிஷன் அவென்யூவில் ஆகஸ்ட் 15-ம் தேதி 2018-ம் ஆண்டு நடந்த The Indian Day Parade எனும் உலகின் மிகப்பெரிய சுதந்திர தின கூட்டத்தில் இவர் முழங்கிய வந்தே மாதரம் என்ற முழக்கம் அனைவரின் பாராட்டைப்பெற்றது. மேலும் இந்த நிகழ்வு அந்நாட்டு பத்திரிக்கைகளில் தலைப்பு செய்தியாகவும் இடம் பெற்றது.

 

சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி இருக்கும் இவரது இசை நிகழ்ச்சி வீடியோக்களை ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.

Related News

4145

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Actor Sathyaraj Inaugurated the Iswarya Cancer Centre
Monday March-09 2026

Strengthening its commitment to advanced cancer diagnosis and treatment, Iswarya Hospital today inaugurated the Iswarya Cancer Centre at its OMR Taramani facility in Chennai...

Recent Gallery