ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹஷீர் தயாரிப்பில் ‘மங்கி டாங்கி’ (Monkey Donkey) என்ற வித்தியாச தலைப்போடு உருவாகும் திரைப்படம் குழந்தை வளர்ப்பு பற்றி கூற வருகிறது. அபி ஆனந்த் மற்றூம் சலீஷ் சுப்ரமணியம் இணைந்து இப்படத்தை இயக்குகிறார்கள்.
இப்படம் குறித்து தயாரிப்பாளர் ஹஷீர் கூறூகையில், ”இயந்திரமான இக்காலத்தில் குழந்தை வளர்ப்பு என்பது ஒரு மிகப்பெரிய சவால். தற்கால குழந்தைகள் பெற்றோர்களின் அன்புக்காகவும், நேரத்திற்காகவும் ஏங்குகிறார்கள். அன்புக்கு ஏங்கும் குழந்தையை, இருவர் கடத்தினால் என்ன ஆகும் என்னும் சுவாரசியமான களத்தில் ஹாலிவுட் திரைப்படம் ‘பேபிஸ் டே அவுட்’ (baby's day out) பாணியில், பயணிக்கும் திரைப்படமே இது.
இயக்குநர்கள் அபி ஆனந்த் மற்றும் சலீஷ் சுப்ரமணியம் கதையை கூறிய பொழுது என்னால் எளிதாக கதையின் ஒட்டத்தோடும், கதாபாத்திரங்களோடும் இணைத்து கொள்ள முடிந்தது. அதுவே என்னை படத்தை தொடங்குவதற்கான உத்வேகத்தையும் கொடுத்தது. இப்படம் அனைத்து மக்களுக்கும் ரசிக்கும் படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமில்லை.” என்றார்.
ஸ்ரீராம், கிஷோர், பேபி யுவினா, யோஜைபீ, வந்தனா ஆகியோர் நடிக்கும் இப்படத்திற்கு சூரஜ் குரூப் இசையமைக்க, கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். ரிசல் ஜைனி படத்தொகுப்பு செய்ய, சங்கீத் பாடல்கள் எழுதுகிறார்.
தேனி மாவட்டத்தின் இயங்கை வளம் நிறைந்த பகுதிகளில் ‘மங்கி டாங்கி’ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.
’ராக்கெட் பாய்ஸ்’ (Rocket Boys), ‘ஜாட்’ (Jaat), ’ஃபர்ஷி’ (Farzi), ‘கேசரி - சாப்டர் 1’ (Kesari Chapter 2) போன்ற பிரபல ஹிந்தி வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் தனது துடிப்பான நடிப்பால் கவனம் பெற்ற ரெஜினா கசான்ட்ரா, இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மதுர் பந்தார்க்கருடன் புதிய படத்தில் நடிக்க தயாராக இருக்கிறார்...
அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் கே...
ஆக்சன் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெற்ற போது சண்டை பயிற்சி கலைஞரான மோகன்ராஜ் எதிர்பாராவிதமாக உயிரிழந்தார்...