‘இறுதிச் சுற்று’, ‘விக்ரம் வேதா’ என்று தொடர் வெற்றிகளின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் தனது வெற்றி பயணத்தை தொடங்கியுள்ள நடிகர் மாதவன், பாலிவுட்டிலும் பிஸியான நடிகராக வலம் வருகிறார்.
இதற்கிடையே ஐஸ்வர்யா ராய், அனில் கபூர் நடிக்கும் ‘பேனி கான்’ என்ற இந்தி படத்தில் மாதவன் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. இந்த நிலையில், ‘பேனி கான்’ இந்தி படத்தில் இருந்து மாதவன் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து மாதவன் கூறுகையில், “பேனி கான் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை தான். ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் என்னால் அப்படத்தில் நடிக்க முடியவில்லை. பேனி கான் படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
மாதவன் விலகியதால், அவர் வேடத்தில் ராஜ்குமார் ராவ் நடிக்க உள்ளார். அதுல் மஞ்ச்ரேக்கர் இயக்கும் இப்படத்தை ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா தயாரிக்கிறார்.
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...