பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் ஹரிஷ் கல்யாண், ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் மூலம் வெற்றி பட ஹீரோவாகியிருப்பவர், தற்போது பாடகர் அவதாரம் எடுத்திருக்கிறார்.
ரஞ்சித் ஜெயகொடி இயக்கும் ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’ படத்தில் ஹீரோவாக நடிக்கும் ஹரிஷ் கல்யாண், அப்படத்தில் சாம் சி.எஸ், இசையில் இடம்பெறும் “ஏய் கடவுளே...” என்ற பாடலை பாடியிருக்கிறார்.
சமகாலத்தின் காதலில் சிக்கிய இளைஞனின் மனநிலையை பற்றி விவரிக்கும் இப்பாடலை ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து விஜய் சேதுபதியும் பாடியிருக்கிறார் என்பது இப்பாடலின் கூடுதல் சிறப்பாகும்.
இது குறித்து கூறிய ஹரிஷ் கல்யாண், இப்பாடலின் ரெக்கார்டிங் ஒரு புதுமையான அனுபவம். முதலில் நாங்கள் தனி வார்த்தைகளில் அமைத்த பாடல், பின்னர் முழு வடிவத்தை பெற்றது மிகவும் மகிழ்ச்சியான தருணம். “ஏய் கடவுளே..” எனது முதல் முழுநீள பாடலாக இருக்கும். எதிர்ப்பார்ப்பையும் மீறி ரசிகர்கள் அளித்திருக்கும் இந்த வரவேற்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.” என்றார்.
மாதவ் மீடியா சார்பில் பாலாஜி கப்பா தயாரிக்கும் ‘இஸ்பெட் ராஜாவும் இதயராணியும்’ ரொமாண்டிக் ட்ரீட்டாக உருவாகி வருகிறது.
2026-ம் ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்ப்பு மிக்க படங்களுல் ஒன்றாகக் கருதப்படும், ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ (Toxic: A Fairytale for Grown-ups), திரைப்படத்தில், கியாரா அத்வானி (Kiara Advani) ஏற்றுள்ள ‘நாடியா’ (Nadia) கதாபாத்திரத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு அதிகாரபூர்வமாக சமீபத்தில் வெளியிட்டது...
உலகம் முழுவதும் உள்ள படைப்பாளிகளுக்கு நேரடியாக தயாரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை அடையும் வாய்ப்பை உருவாக்கி கொடுக்கும் விதத்தில், ’தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் இன்டர்நேஷனல்’ (The Script Craft International Short Film Festival) என்ற தலைப்பில் குறும்பட போட்டி ஒன்று தொடங்கியுள்ளது...
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...