தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் காமெடி நடிகராக உள்ள யோகி பாபுவின் கால்ஷீட்டுக்காக பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் காத்திருக்கிறார்கள். ஒரு காட்சியிலாவது அவரை நடிக்க வைத்துவிட்டு, அதை படத்தின் புரோமோஷன்களுக்கு பயன்படுத்திக் கொள்ளவும் செய்கிறார்கள்.
இப்படி பிஸியான நடிகரான யோகி பாபு, தற்போது விஜய், அஜித் என்று உச்ச நடிகர்களின் படங்களிலும் நடிப்பதால், தனது சம்பளத்தை ஜெட் வேகத்தில் உயர்த்திவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், யோகி பாபு சென்னையில் பிரம்மாண்டமான முறையில் வீடு ஒன்றை கட்டியுள்ளார். அந்த வீட்டுக்கு தனது அம்மாவின் பெயரான ‘விசாலாட்சி இல்லம்’ என்று பெயர் வைத்திருப்பவர், சமீபத்தில் தனது புதிய வீட்டின் புதுமனைபுகு விழா நிகழ்வையும் நடத்தியிருக்கிறார்.
இந்த நிகழ்வில் கலந்துக் கொண்ட யோகி பாபுவின் திரையுலக நண்பர்கள் சிலர், அவரது பிரம்மாண்டாமான வீட்டைப் பார்த்து ஆச்சரியப்படுவதோடு, அவரை வாழ்த்தியும் வருகிறார்கள்.
இதோ அந்த வீடு,
@iYogiBabu @yogibabu_offl#yogibabu brother may God bless you many more happy returns... #visalatchiillam
— Actress Harathi (@harathi_hahaha) January 30, 2019
Housewarming today 🤗💐 pic.twitter.com/ChqMzmxplt
2026-ம் ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்ப்பு மிக்க படங்களுல் ஒன்றாகக் கருதப்படும், ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ (Toxic: A Fairytale for Grown-ups), திரைப்படத்தில், கியாரா அத்வானி (Kiara Advani) ஏற்றுள்ள ‘நாடியா’ (Nadia) கதாபாத்திரத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு அதிகாரபூர்வமாக சமீபத்தில் வெளியிட்டது...
உலகம் முழுவதும் உள்ள படைப்பாளிகளுக்கு நேரடியாக தயாரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை அடையும் வாய்ப்பை உருவாக்கி கொடுக்கும் விதத்தில், ’தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் இன்டர்நேஷனல்’ (The Script Craft International Short Film Festival) என்ற தலைப்பில் குறும்பட போட்டி ஒன்று தொடங்கியுள்ளது...
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...