ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா, அஸ்வின் என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். குழந்தை செளந்தர்யாவிடம் வளரும் நிலையில், அஸ்வின் வேறு ஒரு திருமணம் செய்துக் கொண்டார்.
இதற்கிடையே, செளந்தர்யாவும் விசாகன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்ய உள்ளார். மிகப்பெரிய தொழிலதிபரான விசாகன் - செளந்தர்யா திருமணம் வரும் பிப்ரவரி 10,11 ஆகிய தேதிகளில் ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், தனது மறுமணம் குறித்து முதல் முறையாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கும் செளந்தர்யா, தனது சமூக வலைதள பக்கத்தில் பட்டு புடவையுடன் போட்டோவை வெளியிட்டு, “இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு, நான் ஆசிர்வதிக்கப்பட்டவள்” என்று பதிவிட்டுள்ளார்.
#OneWeekToGo #BrideMode #Blessed 😊😊😊🙏🏻🙏🏻🙏🏻 #VedVishaganSoundarya #Family ❤️❤️❤️ pic.twitter.com/fJYkHp8J1l
— soundarya rajnikanth (@soundaryaarajni) February 4, 2019
தயாரிப்பாளர் சாந்தோஷ் டி.குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி...
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...