பாலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ள சன்னி லியோனி, தனது கவர்ச்சியால் ஒட்டுமொத்த பாலிவுட்டைய கிரங்கடித்த நிலையில், தற்போது தனது கவனத்தை தென்னிந்திய சினிமா பக்கம் திருப்பியுள்ளார். விஷாலுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆட இருப்பவர், ‘வீரமாதேவி’ என்ற படத்தில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
மேலும், ’ரங்கீலா’ என்ற மலையாளப் படத்தில் நடித்து வரும் சன்னி லியோனி, மம்மூட்டி நடிப்பில் உருவாகி வரும் ‘மதுர ராஜா’ என்ற மலையாளப் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாம் போட்டிருக்கிறார்.
இந்த பாடலுக்கு நடனமாடியது குறித்த தனது அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டவர், அந்த பாடலுக்கு நடனம் அமைத்த ராஜு சுந்தரம் பற்றி புகார் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதாவது பாடலுக்கு நடனம் ஆடியது குறித்து கூறிய சன்னி லியோனி, ”பாடலுக்கு வாயசைத்து பாடி நடிப்பதில் எந்த சிரமும் இருக்கவில்லை. ஆனால், நடன இயக்குநர் ராஜு சுந்தரத்தின் நடன அசைவுகள் தான் தன்னை ரொம்பவே சிரமப்படுத்தி விட்டது.” என்று தெரிவித்திருக்கிறார்.
எவ்வளவோ பார்த்த சன்னி லியோனையே இப்படி சிரமப்படுத்தியிருக்கும் ராஜு சுந்தரம், பெரிய ஆளு தான்.
தயாரிப்பாளர் சாந்தோஷ் டி.குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி...
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...