தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் அஜித், மற்ற நடிகர்களைவிட தன்னை ரொம்பவே வேறுபடுத்தி காட்டிக்கொள்கிறார். அதற்காகவே, தான் நடிக்கும் படங்கள் உட்பட எந்த ஒரு சினிமா நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துக் கொள்வதில்லை. அதேபோல், ரசிகர் மன்றங்களையும் கலைத்துவிட்டார்.
இதற்கிடையே, அஜித்தின் ‘விஸ்வாசம்’ மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, வசூலிலும் பல சாதனைகளை முறியடித்திருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து ‘பிங்க்’ இந்தி படத்தின் ரீமேக்கில் அஜித் நடிக்கிறார். எச்.வினோத் இயக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். இப்படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.
இப்படத்தில் அஜித், வித்யா பாலான் ஆகியோரை தவிர மூன்று இளம் பெண்களின் கதாபாத்திரமும் உள்ளது. படத்தின் முக்கியத்துவம் வாய்ந்த இந்த கதாபாத்திரங்களில் ஒன்றில் ஷ்ரத்த ஸ்ரீநாத் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில், இரண்டு நடிகைகளை தேர்வு செய்யும் பணியில் படக்குழு ஈடுபட்டிருந்தது.
இந்த நிலையில், அந்த இரண்டு கதாபாத்திரங்களில் ஒன்றில் போனி கபூர் - ஸ்ரீதேவி தம்பதியின் மகள் ஜான்வி கபூரை நடிக்க வைக்க அஜித் சிபாரிசு செய்தாராம். அஜித்தின் சிபாரிசை ஏற்று இயக்குநரும் போனி கபூரிடம் விருப்பத்தை தெரிவிக்க, அவரும் உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.

ஜான்வி நடிகையாக அறிமுகமான பாலிவுட் திரைப்படம் சுமாரான வெற்றிப் பெற்ற நிலையில், அவர் அஜித் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...
Strengthening its commitment to advanced cancer diagnosis and treatment, Iswarya Hospital today inaugurated the Iswarya Cancer Centre at its OMR Taramani facility in Chennai...