தமிழ் சினிமாவில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் எடுப்பதில் தயாரிப்பாளர்கள் பலர் ஆர்வம் காட்டி வருவதால், முன்னணி நடிகைகள் மட்டும் இன்றி வளரும் நடிகைகள் பலரும் இதுபோன்ற கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார்கள்.
அந்த வரிசையிலான படமாக உருவாகும் ‘கன்னித்தீவு’ படத்தில் வரலட்சுமி, சுபிக்ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், சூப்பர் சுப்பராயன், சர்மிளா ஆகியோர் நடிக்க, முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் முன்னணி நடிகர் ஒருவரும் நடிக்க இருக்கிறார்.
கிருத்திகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை, த்ரிஷாவை வைத்து ‘கர்ஜனை’ படத்தை இயக்கியுள்ள சுந்தர் பாலு இயக்குகிறார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்தக் கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற உள்ளது. மிக பிரமாண்டமான லேக்கில் 9 அடி நீளமான முதலையுடன் வரலட்சுமி, சுபிக்ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி ஆகிய நான்கு கதாநாயகிகளுடன் மொட்டை ராஜேந்திரன் இணைந்து முதலையுடன் மோதுகின்றனர்.
இந்திய சினிமாவில் இதுவரை கண்டிராத வகையில் உருவாகும் முதலையுடன் சண்டை காட்சி, படத்தின் பிற்பகுதியில் வரும் என்று இயக்குநர் சுந்தர் பாலு தெரிவித்துள்ளார். இந்த சண்டை காட்சியை ஸ்டண்ட் சிவா எடுத்து வருகிறார்.
அரோல் குரோலி இசையமைக்கும் இப்படத்திற்கு சிட்டிபாபு ஒளிப்பதிவு செய்கிறார் லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் செய்கிறார்.
‘உங்களுடைய கதையை அடிப்படையாகக் கொண்டு…’ என்ற டேக்லைனுடன் ‘பிளாக்மெயில்’ படத்தின் டிரைலர் வெளியானபோதே ரசிகர்கள் இந்தப் படத்தை அதிகம் எதிர்பார்த்துள்ளனர்...
நடிகர் சூர்யாவின் மாஸ் அவதாரத்தில் உருவாகி வரும் ‘கருப்பு திரைப்படத்தின் அப்டேட்டுக்காக அவரது ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று ‘கருப்பு’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது...
’ராக்கெட் பாய்ஸ்’ (Rocket Boys), ‘ஜாட்’ (Jaat), ’ஃபர்ஷி’ (Farzi), ‘கேசரி - சாப்டர் 1’ (Kesari Chapter 2) போன்ற பிரபல ஹிந்தி வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் தனது துடிப்பான நடிப்பால் கவனம் பெற்ற ரெஜினா கசான்ட்ரா, இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மதுர் பந்தார்க்கருடன் புதிய படத்தில் நடிக்க தயாராக இருக்கிறார்...