பிரபலங்களின் வாழ்த்து மழையில் ‘பக்ரீத்’ டீசர்!
Saturday February-09 2019

'M10 PRODUCTION' சார்பில் எம்.எஸ்.முருகராஜ் தயாரித்து வரும் படம் ‘பக்ரீத்’. இப்படத்திற்கு  கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் ஜெகதீசன் சுபு.

 

ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் ஹீரோவாக விக்ராந்தும், ஹீரோயினாக வசுந்தராவும் நடித்துள்ளனர். மேலும் பல முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். 

 

படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் டீசரை பிரபல இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், அட்லி, நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா, விஷ்ணு விஷால், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலர் தங்களது சமூக வலைதளத்தில் வெளியிட்டு படம் வெற்றி பெற வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர். 

 

டி.இமான் இசையமைத்து வரும் இப்படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு செய்து வருகிறார்.  திலிப் சுப்புராயன் ஸ்டண்ட் இயக்குநராகவும், மதன் கலை இயக்குநராகவும் பணிபுரிந்து வருகிறார்கள். 

 

விரைவில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகவுள்ளது. கோடை விடுமுறையில் பக்ரீத் வெளியாக இருக்கிறது.

Related News

4192

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Actor Sathyaraj Inaugurated the Iswarya Cancer Centre
Monday March-09 2026

Strengthening its commitment to advanced cancer diagnosis and treatment, Iswarya Hospital today inaugurated the Iswarya Cancer Centre at its OMR Taramani facility in Chennai...

Recent Gallery