’36 வயதினிலே’ படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த ஜோதிகா, தொடர்ந்து ’மகளிர் மட்டும்’, ‘நாச்சியார்’, ‘காற்றின் மொழி’ என பெண்களை மையப்படுத்திய படங்களில் நடித்து வெற்றிப் பெற்று வருகிறார்.
இந்த நிலையில், ‘கோலமாவு கோகிலா’ படம் மூலம் நயந்தாராவுடன் கூட்டணி வைத்து காமெடியில் கலக்கிய யோகி பாபுடன் கூட்டணி அமைத்திருக்கும் ஜோதிகா, காமெடி படம் ஒன்றில் வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் ரேவதி, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
‘குலேபகாவலி’ படத்தை இயக்கிய கல்யாண் இயக்கும் இப்படத்தை 2D எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்கிறார்.
ஆனந்தகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். வீரசமர் கலையை நிர்மாணிக்க, விஜய் எடிட்டிங் செய்கிறார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா கலந்துக் கொண்டு கிளாப் அடித்து படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில், ஜோதிகா, ரேவதி, நடிகர்கள் ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், இயக்குநர் பிரம்மா, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கப் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன், படத்தின் இயக்குநர் கல்யாண் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
‘உங்களுடைய கதையை அடிப்படையாகக் கொண்டு…’ என்ற டேக்லைனுடன் ‘பிளாக்மெயில்’ படத்தின் டிரைலர் வெளியானபோதே ரசிகர்கள் இந்தப் படத்தை அதிகம் எதிர்பார்த்துள்ளனர்...
நடிகர் சூர்யாவின் மாஸ் அவதாரத்தில் உருவாகி வரும் ‘கருப்பு திரைப்படத்தின் அப்டேட்டுக்காக அவரது ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று ‘கருப்பு’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது...
’ராக்கெட் பாய்ஸ்’ (Rocket Boys), ‘ஜாட்’ (Jaat), ’ஃபர்ஷி’ (Farzi), ‘கேசரி - சாப்டர் 1’ (Kesari Chapter 2) போன்ற பிரபல ஹிந்தி வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் தனது துடிப்பான நடிப்பால் கவனம் பெற்ற ரெஜினா கசான்ட்ரா, இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மதுர் பந்தார்க்கருடன் புதிய படத்தில் நடிக்க தயாராக இருக்கிறார்...