‘வர்மா’ படம் கைவிடப்பட்டதும், அதற்கான காரணமும் தான் கோடம்பாக்கத்தின் தற்போதைய பரபரப்பு செய்தி. தேசிய விருது பல வாங்கிய படங்களை இயக்கிய பாலாவுக்கு இத்தகைய நிலையா? என்று பலர் ஆதங்கப்பட்டாலும், சிலரோ, “அவருக்கு இது வேணும்தான்” என்று புலம்பவும் செய்கிறார்கள்.
‘வர்மா’ படத்தை மிக மோசமாக பாலா எடுத்ததால் தான், படத்தை கைவிடுகிறோம், என்று தெரிவித்த தயாரிப்பு தரப்பு, அதே சமயம், வேறு ஒரு இயக்குநரை வைத்து, மீண்டும் துருவையே ஹீரோவாகவும் வைத்து எடுப்பதாகவும் அறிவித்திருக்கிறது.
இதற்கிடையே, பாலா இயக்கிய ‘வர்மா’ படத்தை தங்களுக்கு போட்டுக் காட்டாமல் அழிக்க கூடாது, என்று இயக்குநர்கள் சங்கத்தை சேர்ந்த பல இயக்குநர்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தனது தரப்பு விளக்கத்தை கூறியிருக்கும் இயக்குநர் பாலா, ’வர்மா’ படத் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தெரிவித்தது தவறான தகவல், என்று கூறியிருக்கிறார்.
மேலும், படைப்பு சுதந்திரம் கருதி, வர்மா படத்தில் இருந்து விலகிக் கொள்வது தான் எடுத்த முடிவு, அதற்காக கடந்த கனவரி மாதமே தயாரிப்பாளருடன் தான் ஒப்பந்தம் செய்துக் கொண்டதாக, தெரிவித்திருக்கும் பாலா, ஒப்பந்த பத்திரத்தையும் வெளியிட்டிருக்கிறார்.
இத்துடன், துருவ் விக்ரமின் எதிர்கால நலன் கருது, இந்த விவகாரம் தொடர்பாக வேறு எதுவும் பேச விரும்பவில்லை, என்று இயக்குநர் பாலா கூறியிருக்கிறார்.
மொத்தத்தில், பாலாவின் மவுனத்திற்கு பின்னால் துருவ் விக்ரம் இருப்பதோடு, வேறு ஏதோ ரகசியம் இருப்பதும் உறுதியாகிவிட்டது.
தயாரிப்பாளர் சாந்தோஷ் டி.குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி...
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...