ரஜினிகாந்தின் இளையமகள் செளந்தர்யாவுக்கும், தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமண நிகழ்வில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் நேரில் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மற்றும் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, வேலுமணி, முன்னாள் மேயர் சைதை துரைசாமி, மு.க.அழகிரி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரும் கலந்துக் கொண்டார்கள்.
நடிகர்கள் கமல்ஹாசன், மோகன் பாபு, விஷ்ணு மஞ்சு, விக்ரம் பிரபு, ராம்குமார், பிரபு, நடிகைகள் கஸ்தூரி, லட்சுமி மஞ்சு, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன், குட்டி பத்மினி, லதா சேதுபதி, அதிதி ராவ், வைரமுத்து, மதன் கார்க்கி, இயக்குநர்கள் மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார், தயாநிதி அழகிரி, துஷாந்த் ராம்குமார், பரந்தாமன் தாணு, தாணு, கஜராஜ், நல்லி குப்புசாமி செட்டி, சுஹாசினி, பி.வாசு, செல்வராகவன், கஸ்தூரிராஜா, ஏ.வி.எம்.சரவணன், நக்கீரன் கோபால், அட்வேகேட் மோகன் உள்ளிட்ட ஏராளமான சினிமா பிரபலங்களும் மணமக்களை நேரில் வாழ்த்தினார்கள்.
வீடியோவை பார்க்க,
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...
Strengthening its commitment to advanced cancer diagnosis and treatment, Iswarya Hospital today inaugurated the Iswarya Cancer Centre at its OMR Taramani facility in Chennai...