அரவிந்த்சாமி நடிப்பில் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் ‘கள்ள பார்ட்’!
Monday February-11 2019

’சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’ ஆகிய படங்களை முடித்திருக்கும் அரவிந்த்சாமி, தற்போது ‘கள்ள பார்ட்’ படத்தில் பிஸியாக இருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக ரெஜினா நடிக்கிறார். இவர்களுடன் ஹரிஷ் பெராடி, ஆதேஷ், பாப்ரிகோஷ், ‘ராட்சசன்’ புகழ் பேபி மோனிகா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

 

மூவிங் பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.பார்த்தி, எஸ்.சீனா ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை பி.ராஜபாண்டி இயக்குகிறார்.

 

வித்தியாசமான கதைக்களம் கொண்ட, ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வரும் ‘கள்ள பார்ட்’ குறித்து இயக்குநர் ராஜ்பாண்டி கூறுகையில், “அரவிந்த்சாமி எவ்வளவோ படங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு எந்த காரக்டர் கொடுத்தாலும் சிறப்பித்து விடக் கூடியவர். இதில் அதிபன் என்கிற ஹார்ட்வேர் கதாபாத்திரம். நாம் என்ன சொல்கிறோமோ அதை அப்படியே உள் வாங்கி பிரதிபலிப்பார். அது ஸ்கிரீனில் இன்னும் பிரமிப்பை ஏற்படுத்தி விடும். கள்ள பார்ட் அவருக்கு சிகரமாய் இருக்கும். ரெஜினா டான்ஸ் டீச்சராக நடிக்கிறார்.

 

படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட இருக்கிறோம்.” என்றார்.

Related News

4203

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Actor Sathyaraj Inaugurated the Iswarya Cancer Centre
Monday March-09 2026

Strengthening its commitment to advanced cancer diagnosis and treatment, Iswarya Hospital today inaugurated the Iswarya Cancer Centre at its OMR Taramani facility in Chennai...

Recent Gallery