’பரியேறும் பெருமாள்’ வெற்றியை தொடர்ந்து விஜய் படத்தில் கமிட் ஆகியிருக்கும் கதிர் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள படம் ‘சத்ரு’. இப்படத்தில் முதல் முறையாக போலீஸ் வேடம் ஏற்றிருக்கும் கதிருக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடித்திருக்கிறார். இவர்களுடன் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி, பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கியன், சாது, குருமூர்த்தி, பாலா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ‘ராட்டினம்’ படத்தில் ஹீரோவாக நடித்த லகுபரன் இதில் வில்லனாக நடிக்கிறார்.
ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற ராஜரத்தினம் மற்றும் ஸ்ரீதரன் ஆகியோர் தயாரித்திருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி நவீன் நஞ்சுண்டான் இயக்குகிறார்.
குற்றவாளிகளாக யார் கண்ணுக்கும் தெரியாமல் வாழும் வில்லன்கள் ஐந்து பேரையும் துணிச்சல் மிக்க ஒரு போலீஸ் அதிகாரி, எப்படி மடக்கி பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துகிறார், என்பது தான் இப்படத்தின் கதை. 24 மணி நேரத்தில் நடக்கும் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கிறது.
’மரகத நாணயம்’, ‘ராட்சசன்’ போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த டில்லிபாபு, சமீபத்தில் இப்படத்தை பார்த்து பாராட்டியதோடு, மைல்ஸ்டோன் மூவிஸ் என்ற நிறுவனம் சார்பில் தானே வெளியிடவும் முடிவு செய்திருக்கிறார். தொடர் வெற்றிப் படங்களை தயாரித்து வரும் டில்லிபாபு, இப்படத்தை வெளியிடுவதால், ‘சத்ரு’ படக்குழு உற்சாகமடைந்துள்ளார்கள்.
வரும் மார்ச் 1 ஆம் தேதி ‘சத்ரு’ வெளியாகிறது.
தயாரிப்பாளர் சாந்தோஷ் டி.குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி...
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...