ரஜினிகாந்தின் இளையமகள் செளந்தர்யா அஸ்வின் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். இதற்கிடையே, விவாகரத்துக்கு பிறகு தனது குழந்தை தான் உலகம், என்று கூறிய செளந்தர்யா, சினிமாவிலும் தனது கவனத்தை செலுத்தினார். அதன்படி, தனுஷை வைத்து ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தையும் இயக்கினார்.
இதற்கிடையே, விசாகன் என்பவரை காதலித்த செளந்தர்யா அவரை திருமணமும் செய்துக் கொண்டார். செளந்தர்யா - விசாகன் திருமண நிகழ்ச்சிகள் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவர்களது திருமணம் நடைபெற்றது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என ஏராளமானவர்கள் இதில் கலந்துக் கொண்டார்கள்.
இந்த நிலையில், செளந்தர்யாவின் திருமண வரவேற்பு மற்றும் திருமணத்தில் அவரது அக்கா கணவரான நடிகர் தனுஷ் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியானது. அதாவது, செளந்தர்யா திருமண வரவேற்பு மற்றும் திருமண புகைப்படங்கள் எதிலுமே தனுஷ் இல்லாததால், இத்தகைய தகவல் வெளியானது.

ஆனால், விசாரித்ததில் தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ படத்தில் நடித்து வரும் தனுஷ், படப்பிடிப்பு இருந்ததால், திருமண வரவேற்புக்கு காலதாமதமாக வந்தாராம். மேலும், அசுரன் படத்திற்காக தனது கெட்டப்பை மாற்றியிருப்பதால், அந்த கெட்டப் வெளியே தெரியாமல் இருப்பதற்காக போட்டோவில் அவர் நிற்கவில்லையாம்.

செளந்தர்யாவின் திருமண நிகழ்வில் தனுஷ் கலந்துக் கொண்டாலும், தனது கெட்டப்பின் ரகசியம் காக்கவே, போட்டோ மற்றும் வீடியோவை தவிர்த்துவிட்டாராம்.
2026-ம் ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்ப்பு மிக்க படங்களுல் ஒன்றாகக் கருதப்படும், ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ (Toxic: A Fairytale for Grown-ups), திரைப்படத்தில், கியாரா அத்வானி (Kiara Advani) ஏற்றுள்ள ‘நாடியா’ (Nadia) கதாபாத்திரத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு அதிகாரபூர்வமாக சமீபத்தில் வெளியிட்டது...
உலகம் முழுவதும் உள்ள படைப்பாளிகளுக்கு நேரடியாக தயாரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை அடையும் வாய்ப்பை உருவாக்கி கொடுக்கும் விதத்தில், ’தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் இன்டர்நேஷனல்’ (The Script Craft International Short Film Festival) என்ற தலைப்பில் குறும்பட போட்டி ஒன்று தொடங்கியுள்ளது...
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...