‘ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை’ மற்றும் ’அகரம் பவுண்டேஷன்’ மூலம் நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தார் ஏழை மாணவர்கள் மற்றும் ஆதரவற்ற மாணவர்களின் கல்விக்கு பல உதவிகளை செய்து வருகிறார்கள்.
பள்ளி படிப்பு, கல்லூரி படிப்பு என்று தமிழகம் முழுவதிலும் பல மாணவ, மாணவிகளுக்கு கடந்த 10 ஆண்டுகளாக பல உதவிகளை செய்து வரும் அகரம் பவுண்டேஷன், இந்த ஆண்டுக்கான தகுதியான மாணவர்களை அடையாளம் காண ஆசிரியர்களின் உதவியை நாடியுள்ளது.
இது குறித்து அகரம் பவுண்டேஷன் சார்பில் ஆசிரியர்களுக்கு வைக்கப்பட்ட அன்பு வேண்டுகோளில், “அரசுப் பள்ளி மாணவர்கள் கல்லூரிகளில் உயர்கல்வி பெற அகரம் பவுண்டேஷன் கடந்த பத்தாண்டுகளாக துணைபுரிகிறது. பெற்றோர்களை இழந்த, ஆதரவற்ற, வறுமை காரணமாக மேற்கொண்டு கல்வியைத் தொடர முடியாத மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்குகிறது.
இதுவரை சுமார் 2500 மாணவர்கள் அகரம் விதைத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளார்கள் என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
2019 ஆம் ஆண்டு ப்ளஸ்டூ தேர்வு எழுதுகிற மாணவர்களில் தகுதியும் திறமையும் வாய்ந்த, ஏழை மாணவர்களை அகரத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பெருமக்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
வறுமை மற்றும் குடும்பச் சூழல் காரணமாக கல்வியைத் தொடர முடியாமல் போகிற மாணவர்களை கீழ்காணும் அகரம் பவுண்டேஷன் அலுவலக எண்ணிற்குத் தொடர்பு கொள்ள செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். ப்ளஸ்டூ மாணவர்களின் வகுப்பறை கரும்பலகையில் இந்த தொடர்பு எண்களை எழுதிப் போடும்படி கேட்டுக்கொள்கிறோம். 80561 34333 / 98418 91000” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘உங்களுடைய கதையை அடிப்படையாகக் கொண்டு…’ என்ற டேக்லைனுடன் ‘பிளாக்மெயில்’ படத்தின் டிரைலர் வெளியானபோதே ரசிகர்கள் இந்தப் படத்தை அதிகம் எதிர்பார்த்துள்ளனர்...
நடிகர் சூர்யாவின் மாஸ் அவதாரத்தில் உருவாகி வரும் ‘கருப்பு திரைப்படத்தின் அப்டேட்டுக்காக அவரது ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று ‘கருப்பு’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது...
’ராக்கெட் பாய்ஸ்’ (Rocket Boys), ‘ஜாட்’ (Jaat), ’ஃபர்ஷி’ (Farzi), ‘கேசரி - சாப்டர் 1’ (Kesari Chapter 2) போன்ற பிரபல ஹிந்தி வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் தனது துடிப்பான நடிப்பால் கவனம் பெற்ற ரெஜினா கசான்ட்ரா, இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மதுர் பந்தார்க்கருடன் புதிய படத்தில் நடிக்க தயாராக இருக்கிறார்...