ஸ்டுடியோக்களை காட்டிலும் பொது இடங்களில் சினிமா படப்பிடிப்புகள் நடைபெறுவது அதிகரித்திருக்கும் நிலையில், சில படப்பிடிப்புகளால் அவ்வபோது சில பரபரப்பு சம்பவங்களும் நிகழ்கின்றன.
அந்த வகையில், சினிமா அடிதடியை நிஜ சம்பவம் போல படமாக்கியதால், சென்னை புறநகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு, அப்படத்தின் ஹீரோவை போலீசார் துப்பாக்கி காட்டி வளைத்தது கோடம்பாக்கத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலம் புரொடக்ஷன் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில், அதியன் ஆதிரை என்பவர் இயக்கத்தில் உருவாகும் படம் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’. ‘அட்ட கத்தி’ தினேஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஆனந்தி ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் ரிதிவ்கா, ராம்தாஸ், லிங்கேஷ், ஜான் விஜய், ஜானி ஹரி, வினோத் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகளை சண்டைப் பயிற்சியாளர் சாம் மற்றும் இயக்குநர் அதியன் ஆதிரை சென்னை புறநகர் தேசிய நெஞ்சாலையில் இரவு நேரத்தில் படமாக்கிக் கொண்டிருந்தனர்.
காட்சிப்படி நாயகன் தினேஷ், வேகமாக செல்லும் லாரியில் தொங்கிக் கொண்டு சண்டைப்போட வேண்டும், அதன்படி காட்சியை படக்குழு படமாக்கிக் கொண்டிருந்தனர். கேமரா லாரிக்குள் இருந்ததால் சாலையில் செல்வோருக்கு நிஜமாகவே ஏதோ அடிதடி நடப்பது போன்ற தோற்றத்தை கொடுத்திருக்கிறது. அந்த நேரத்தில் அவ்வழியே வந்த ஸ்பெஷல் கமாண்டோ படை வீரர்கள், நிஜமாகவே நெடுஞ்சாலையில் லாரியில் ஏதோ நடக்கிறது, என்று லாரியை வளைத்துப் பிடித்தனர்.
ஆனால், நடப்பதை உணராத ஹீரோ தினேஷ், “இது என்ன புதுசா கமாண்டோ வீரர்கள் எல்லாம் காட்சியில் வராங்களே” என்று யோசித்ததோடு, சுற்றி வளைத்த போலீசார் வைத்திருந்த துப்பாக்கியை பார்த்து “இது என்ன ஒரிஜினல் மாதிரியே இருக்கு” என்று கேட்க, போலீசார் துப்பாக்கியை தினேஷ் மீது குறிவைக்க, பதற்றமடைந்த இயக்குநர் “சூட்டிங்...சூட்டிங்...” என்று சத்தம் போட, அதன் பிறகே, நம்மை துப்பாக்கியோடு மடக்கியதும், அவர்கள் வைத்திருந்ததும் ஒரிஜனல், என்பது தினேஷுக்கு புரிந்து அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
நெருங்கி வந்த போலீசார் தினேஷ் முகத்தை கவனித்த பிறகே, நிஜமான சூட்டிங் என்று உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தால் சாலையில் பரபரப்பு ஏற்பட்டாலும், காட்சி ரியலாக இருப்பதாக, ஒரிஜினல் போலீசார் கூறிவிட்டு தினேஷுக்கு வாழ்த்தும் தெரிவித்தார்களாம்.
தற்போது கடைசிக்கட்டத்தில் இருக்கும் ‘இரண்டாம் உலகப்போரின் கடை குண்டு’ படத்தின் படப்பிடிப்பு காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
தயாரிப்பாளர் சாந்தோஷ் டி.குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி...
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...