ரஜினிகாந்தின் இளையமகளான செளந்தர்யா அனிமேஷன் துறையில் படித்துவிட்டு, ரஜினிகாந்தை வைத்து ‘கோச்சடையான்’ என்ற மோஷன் அனிமேஷன் படத்தை இயக்கினார். இந்திய சினிமாவில் உருவான முதல் மோஷன் அனிமேஷன் திரைப்படம் என்ற பெருமையோடு வெளியான அப்படம் எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை. இதற்கிடையே, கடந்த 2010 ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த அஸ்வின் என்ற தொழிலதிபரை செளந்தர்யா காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக செளந்தர்யா சட்டப்பூர்வமாக கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுவிட்டார்.
குழந்தையுடன் தனது தந்தை ரஜினி வீட்டில் வசித்து வந்த செளந்தர்யா, தனுஷை வைத்து படம் ஒன்றை இயக்கிய நிலையில், தற்போது அவர் விசாகன் என்பவரை மறுமணம் செய்துக் கொண்டார். விசாகனும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் தான்.
தனது மகளுக்கு பிரம்மாண்டமான முறையில் மறுமணம் செய்து வைத்த ரஜினிகாந்தை பலர் பாராட்டி வருவதோடு, செளந்தர்யாவின் தைரியமான முடிவுக்கும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், செளந்தர்யாவுக்கு திருமண சீர்வரிசையாக ரூ.500 கோடிக்கு மேலான சொத்துக்களை ரஜினிகாந்த் வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும், தற்போது கோலிவுட்டில் இந்த தகவல் தீயாக பரவி வருகிறது.
ரஜினிகாந்த் செளந்தர்யாவுக்கு 500 கோடி ரூபாய் சொத்துக்களை கொடுத்தாரோ இல்லையோ, செளந்தர்யாவின் கணவர் விசாகன், சுமார் 3 ஆயிரம் கோடிக்கு மேலான சொத்துக்களுக்கு அதிபதியாம். அவரது அபெக்ஸ் மருந்து நிறுவனம் மட்டும் ஆண்டுக்கு ரூ.500 கோடியை வருமானமாக ஈட்டுகிறது. விரைவில் அந்த நிறுவனத்தின் ஆண்டு நிறுவனம் ரூ.750 கோடியை எட்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம்.
தயாரிப்பாளர் சாந்தோஷ் டி.குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி...
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...