Latest News :

ரூ.10 லட்சம் பரிசு வழங்கும் லிப்ரா குறும்பட விழா - 53 குறும்படங்கள் தேர்வு!
Sunday September-03 2017

‘நட்புன்னா என்னானு தெரியுமா’, ‘நளனும் நந்தினியும்’, ‘சுட்ட கதை’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்த லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம், குறும்பட போட்டி ஒன்று நடத்துகிறது. இப்போட்டியில் முதல் இடத்தை பிடிக்கும் குறும்படத்திற்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது. 

 

இப்போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்களது குறும்படங்களை அனுப்புமாறு கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 946 குறும்படங்கள் போட்டிக்காக அனுப்பப்பட்டிருந்தது. அதில் இருந்து சிறந்த குறும்படமாக 53 குறும்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

 

தேர்வு செய்யப்பட்டுள்ள சிறந்த 53 குறும்படங்கள்

 

1. கேங்க்ஸ் ஆஃப் 47 (Gangs of 47)

2. கூர்பி (Koorpi)

3. Karmachakram

4. ஆள் இல்லாத ரூபம் (All ilatha Roobam)

5. முத்தம் (Mutham)

6. தி ரிங் (The Ring

7. தி அஃபயர் (The Affair)

8. வனம் (Vanam)

9. திறந்த புத்தகம் (Thirantha Puthagam)

10. கடன் (Kadan)

11. நான் (Naan 8)

12. சவடால் (Savadaal)

13. நில் (Nil)

14. தமிழச்சி (Thamizhachi)

15. தீரது (Theerathu)

16. எமன் (Yeman)  

17. ரேய்ஸ் ஆஃப் ஹோப் (Rays of hope)

18. கண்ணுக்கு இனியல் (kannuku iniyal)

19. பிச்சை பாத்திரம் (Pitchai Pathiram) 

20. மதராசி (Madharassi)

21. ஜுல்லுனு ஒரு கலவரம் (Jillunu oru kalavaram)

22. எல் போர்ட் (L Board)

23. டிபின் பாக்ஸ் (Tiffen Box)

24. கூர்வால் (Koorvazh)

25. இப்படிக்கு விவசாயி (Ippadiku Vivasayee)

26. அபய (Abaya)

27. குவா குவா (Kuva Kuva)

28. பெண் பால் (Pen Paal)

29. தலை வணங்காதே தமிழா (Thalai Vanankathe thamizha)

30. பேக் போன் (Back Bone)

31. கலியுகம் (kaliyugam)

32. சால்ட் (Salt)

33. பகல் நட்சத்திரம் (Pagal Natchathiram)

34. மாயக்கண்ணாடி (Mayakkanadi)

35. இறுதி அரம் (Iruthi Aram)

36. மனிதம் எங்கே (Manidham Enge)

37. நினைவுகள் (Ninaivugal) 

38. இன் தி ஆர்ப் ஆஃப் நைட் (In the Orb of Night)

39. 93 நாட் அவுட் (93* not out)

40. சாலமன் மை பாஃதர் (Solomon My Father)

41. களவு (Kalavu)

42. ஜியண்ட் வீல் (Giant Wheel)

43. லொயால்டி (Loyalty)

44. 18 ஸ்டிக்ஸ் (18 Sticks)

45. வச்ச குறி தப்பாது (Vacha kuri Thappadhu)

46. கயல் (Kayal)

47. கவரிமான் (Kavarimaan)

48. சில்ர இல்ல பாப்பா (Chilra Illa Papa)

49. அடியே அழகே (Adiye Azhage)

50. எங்க வீட்டு பிள்ளை (Enga Vettu Pillai)

51. விடியட்டும் இனி (Vidiyattum eni)

52. யாட்சி (Yatchi)

53. இப்படிக்கு போலீஸ் (Ippadiku Police)

 

இந்த 53 குறும்படங்களையும் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்கள், தொழிநுட்ப கலைஞர்கள் கொண்ட குழு பரிசீலித்து அதில் சிறந்த பத்து குறும்படங்களை தேர்ந்தெடுப்பார்கள். மிகச்சிறந்த குறும்படம் என்கிற ஒரு பிரிவில் மட்டுமல்லாமல் மிகச்சிறந்த குறும்பட இயக்குநர், நடிகர், நடிகை,  இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என இந்த 53 குறும்படங்களில் இருந்தே பல பிரிவுகளிலும் போட்டியாளர்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர்.

 

இந்த விருது வழங்கும் விழா வரும் நவம்பர் 19 ஆம் தேதி மிக பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள், முதல் பத்து பரிசுகளுக்கு தகுதியான குறும்படங்கள் பற்றிய விபரங்கள் அன்றைய தினம் விழா மேடையில் வைத்து அறிவிக்கப்படும்.

 

முதல் பரிசாக 10 லட்சம், 2 ஆம் பரிசாக 7 லட்சம் மற்றும் 3 ஆம் பரிசாக 5 லட்சம் ரூபாய் என பரிசு தொகைகள் வழங்கப்பட இருக்கின்றன. இதில் இன்னொரு சிறப்பு அம்சமாக மீதி உள்ள ஏழு குறும்படங்களுக்கும் சிறப்பு பரிசாக தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

 

இந்த விழாவை தொடர்ந்து நடத்துவது குறித்து லிப்ரா புரடக்சன்ஸ் ரவீந்தர சந்திரசேகரன் கூறுகையில், “குறும்பட விழாக்கள் நடத்துறது ஒரு சேவை மட்டுமல்ல, இதுக்கு வர்த்தக ரீதியா ஒரு ஓப்பனிங் இருக்குது. அதேசமயம் பணம், லாபம் அப்படிங்கிறத தாண்டி இந்த குறும்பட விழா மூலமா திரையுலகுக்கு நிறைய டெக்னீசியன்களை அறிமுகப்படுத்துறோம்.

 

என்னால எல்லோருக்கும் படம் கொடுக்க முடியாது. ஆனா அவங்களுக்கு படம் கிடைக்கிறதுக்கான வாய்ப்பையும் அவங்களுக்கான பாராட்டையும் ஏற்படுத்தி தரமுடியும். நாளைக்கு அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது அங்கே லிப்ரா விருது வாங்கிருக்கேன்னு அவங்க அதை ஒரு அங்கீகாரமா சொல்லுவாங்கள்ல, வருங்காலத்துல லிப்ரா அவார்ட்ஸ் அப்படின்னா திரையுலகத்துல மிக மரியாதையான ஒரு விஷயமா மாறனும். இதுதான் இந்த குறும்பட விருது விழா நடத்துறதோட நோக்கம்.” என்றார்.

Related News

424

’டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2’ புத்தகம் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திரை பிரபலங்கள்
Thursday July-03 2025

தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...

பெரிய டங்களில் சட்ட விரோத செயல்கள் தான் பெரிதாகக் காட்டப்படுகின்றன - ’மகேஸ்வரன் மகிமை’ பட விழாவில் கே.ராஜன் பேச்சு
Tuesday July-01 2025

எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...

’தேசிங்குராஜா 2’-வின் வெற்றிக்கு விமல் தான் முக்கிய காரணமாக இருக்கப் போகிறார் - இயக்குநர் எழில் உறுதி
Tuesday July-01 2025

நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...

Recent Gallery