Latest News :

உதயநிதி படத்தில் ஜெயலலிதா! - திமுக ஏரியாவில் சலசலப்பு
Wednesday February-20 2019

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருக்கும் திமுக குடும்ப வாரிசான உதயநிதி ஸ்டாலின், அவ்வபோது அரசியல் கூட்டங்களிலும் பங்கெடுத்து வருபவர், சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டு அரசியலில் தீவிரம் காட்ட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இதற்கிடையே, உதயநிதி நடித்து தயாரித்திருக்கும் ‘கண்ணே கலைமானே’ படம் வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியாக உள்ளது. சீனு ராமசாமி இயக்கியிருக்கும் இப்படத்தில் தமன்னா ஹீரோயினாக நடித்திருக்கிறார். இப்படத்தில் உதயநிதியின் நடிப்பு பெரிதும் பேசப்படும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 

இந்த நிலையில், இப்படத்தில் நடிகை தமன்னாவின் கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும், என்று கூறிய இயக்குநர் சீனு ராமசாமி, அந்த வேடத்தை மறைந்த முன்னாள் முதவல்வர் ஜெயலலிதாவை மனதில் வைத்து உருவாக்கியதாக, தெரிவித்துள்ளார்.

 

சமீபத்தில் நடைபெற ‘கண்ணே கலைமானே’ பட பிரஸ் மீட்டில் இது குறித்து பேசிய சீனு ராமசாமி, “ஒரு போல்டான, தைரியமான பெண் வேடம் என்றதும், எனக்கு ஜெயலலிதா தான் நினைவுக்கு வந்தார். உடனே அவரைப் பற்றி பல தகவல்களை சேகரித்து, அதை வைத்து தான் நயந்தாராவின் உடை மற்றும் அவரது பாவனைகளை வடிவமைத்தேன். இந்த விஷயத்தை நான் யாரிடமும் சொல்லவில்லை, அது தேவையும் இல்லை என்று நினைத்தேன். இப்போது தான் இதை சொல்கிறேன், “என்று கூறினார்.

 

Kanne Kalaimaane

 

ஜெயலலிதாவை மனதில் வைத்து உருவாக்கிய கதாபாத்திரம், அதுவும் படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கதாபாத்திரம், திமுக தலைவரின் வாரிசு நடிக்கும் படத்தில் இருக்கும் தகவல் வெளியானதும், திமுக ஏரியாவில் சற்று சலசலப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related News

4249

ஷேனிடம் நிறைய கற்றுக் கொண்டேன் - நடிகர் சாந்தனு
Saturday September-20 2025

தயாரிப்பாளர் சாந்தோஷ் டி.குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி...

நடிகர் ரோபோ சங்கர் மறைவு! - திரையுலகம் அதிர்ச்சி
Thursday September-18 2025

பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...

ஜீ5-ன்‘வேடுவன்’ இணையத் தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது
Wednesday September-17 2025

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ  அறிவிப்பை வெளியிட்டுள்ளது...

Recent Gallery