‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் சந்தானத்தின் ஜோடியாக நடித்த மதுமிதா. ஜாங்கிரி மதுமிதா என்ற பெயரில் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார்.
சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வரும் மதுமிதா, தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் உஷா என்ற பெண்ணுடன் ஏற்பட்ட பிரச்சினையின் போது, அவரது கையை கடித்துவிட்டார். இதையடுத்து இரு தரப்பினரும் போலீசில் புகார் அளிக்க, அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், பெண்ணை கடித்த விவகாரம் தொடர்பாக இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள மதுமிதா அதில், “தான் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில் பராமரிப்பு கட்டணம் குளறுபடி காரணமாக உஷா என்பவருடன் பிரச்னை ஏற்பட்டது. உஷா, ஒவ்வொருவரையும் தவறாகச் சொல்லியிருப்பது தெரிந்தது. உறவாடிக் கெடுப்பது போல அவர் செயல்பட்டது தெரியவந்தது. இதனால், வேறு ஒருநபரிடம் பராமரிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அதன் பிறகு நடந்த சம்பவம், எங்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியது. வாடகை வீட்டில் கூட இப்படி நடக்காது. மின்சாரத்தை கட் பண்ணுவது, ஏ.சி. இணைப்பைத் துண்டிப்பது, மாடிப்படிகளில் எண்ணெய்யை ஊற்றி விடுவது போன்ற செயல்கள் நடந்தன. இது, அடுக்குமாடியில் குடியிருந்தவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது.
எல்லோரும் சேர்ந்து உஷா மீது போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தோம். அப்போது, போலீஸார் உஷாவை எச்சரித்து அனுப்பினர். பின்னர், உஷாவின் டார்ச்சர் அதிகமானது. அப்போது கூட நான் அமைதியாக இருந்தேன். சூட்டிங்கில் இருக்கும் போது, எனக்கு ஆதரவாக வந்தவர்களுக்கு உஷாவால் தொல்லை அதிகமானது.
சம்பவத்தன்று போலீஸ் உயரதிகாரி ஒருவர், வீட்டில் உஷாவிடம் விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது, அந்த போலீஸ் அதிகாரியையும் என்னையும் தவறாக பேசினார் உஷா. அதை நான் தட்டிக்கேட்டேன். இதனால் வாக்குவாதம் அதிகமானது. அப்போது, உஷா என்னைக் கடுமையாகத் தாக்கினார். அதை அருகிலிருந்தவர்கள் தடுக்க முயன்றனர். அவர் என்னைத் தாக்கியதைத் தடுக்கவே லேசாகக் கடித்தேன். எங்களுக்கு நடந்த தகராறில், உஷாவின் குழந்தை நடுவில் மாட்டியதால், நான் என்ன செய்வதென்று திகைத்தேன்.
என்னைக் குறித்த தவறான தகவல்களைச் சொல்லி வருகிறார் உஷா. அவர், டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்தவுடன், நான் புகார் கொடுத்திருக்க வேண்டும். நம்முடைய சட்டத்தில் ஒரு பெண் தாக்கப்படும்போது தற்காப்புக்காக, நகத்தையும் பற்களையும் பயன்படுத்தலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. நான் தவறு செய்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். மக்கள் தான் என்னுடைய முதல் கடவுள். இன்று நடக்கும் விசாரணையில், காவல்துறையில் நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...