பல தொலைக்காட்சி தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடித்து வருபவர் பிர்லா போஸ். இவர் சமீபத்தில், வீடு விஷயத்தில் சிலரிடம் தான் ஏமாற்றப்பட்டது தொடர்பாக கூறியிருந்தார். மேலும், அவர் போலீசில் புகாரும் அளித்திருந்தார்.
அதாவது, பிர்லா போஸ் தற்போது குடியிருக்கும் வீட்டை, சிலர் தங்களது சொந்த வீடு என்று கூறி, பணம் பறித்திருக்கிறார்கள். ஆனால், தற்போது வங்கியில் இருந்து வீட்டை காலி செய்ய சொல்வதால், தன்னிடம் பணம் பறித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கூறி, நடிகர் பிர்லா போஸ் போலீசில் புகார் அளித்துள்ளார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே, இது தொடர்பாக தான் புகார் கொடுத்ததாகவும், ஆனால், அது குறித்து எந்த நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், ”தான் தற்கொலை செய்துக் கொண்டேன் என தகவல் வந்தால் நம்பாதீர்கள், அது கொலையாக தான் இருக்கும்.” என்று நடிகர் பிர்லா போஸ் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தயாரிப்பாளர் சாந்தோஷ் டி.குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி...
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...