ஷகிலா என்றாலே கவர்ச்சியும், அவர் நடித்த மலையாளப் படங்களும் தான் நினைவுக்கு வரும். ஆனால், அப்படிப்பட்ட படங்களில் நடிப்பதை ஷகிலா விட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில், கிடைத்த சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர், தற்போது அந்த சிறு வாய்ப்புகள் கூட இல்லாமல் வீட்டில் ஓய்வில் இருக்கிறார்.
இதற்கிடையே, ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படம் இந்தியில் உருவாகி வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் பெரும் வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில், நடிப்பு மட்டுமே தனக்கு தெரிந்த தொழில், என்று கூறி வந்த ஷகிலா, இனி வேறு ஒரு தொழில் செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார்.
அவரது அறிவிப்பை கேட்ட ஒட்டு மொத்த தமிழ் சினிமாவே பேரதிர்ச்சியடைந்துள்ளது. இருக்காதா பின்ன, ஷகிலா இனி யூடியூபில் திரைப்படங்களை விமர்சனம் செய்யப் போகிறாராம்.
ஆமாங்க, நெசமாத்தான், புதிதாக துவங்கப்பட்டிருக்கும் யூடியூப் சேனல் ஒன்றுக்காக ஷகிலா, திரைவிமர்சனம் செய்யப் போகிறார். அதுவும், எல்லாவிதமான படங்களை பற்றியும் விமர்சனம் செய்யப் போகிறாராம்.
90களின் இறுதியில் மற்றும் 2000களின் தொடக்கத்தில் தனது மென்மையான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்த நடிகர் அபாஸ், பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பி வருகிறார்...
புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...
விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் “சக்தித் திருமகன்”...