தொடர் வெற்றி நாயகனாக உருவெடுத்துள்ள விஜய் சேதுபதி, ’மேற்கு தொடர்ச்சி மலை’ என்ற படத்தை தயாரித்து வரும் நிலையில், ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பலகுமாரா’ பட இயக்குநர் கோகுலின் இயக்கத்தில் நடிக்க உள்ள ‘ஜுங்கா’ படத்தையும் தயாரிக்கிறார். சுமார் ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி இண்டர்நேஷனல் டானாக நடிக்கிறார்.
இப்பட்த்தின் 60 சதவீத படப்பிடிப்பு பிரான்சிலும், மீதமுள்ள படம் சென்னை, தூத்துக்குடி, இராமநாதபுரம் ஆகிய பகுதிகளிலும் படமாக்கப்பட உள்ளதாக இயக்குநர் கோகுல் கூறியுள்ளார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை சயீஷா சைகல் நடிக்கிறார். படம் முழுவதும் வரும் முக்கிய வேடம் ஒன்றில் யோகி பாபு நடிக்கிறார்.
காமெடி, ஆக்ஷன், காதல் என கமர்சியல் அம்சங்கள் அனைத்தும் சரியான அளவில் இடம்பெற்று, விஜய் சேதுபதியின் மாஸ் எண்டர்டெயினராக இருக்கும் வகையில் உருவாகும் இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும், என்று கூறிய இயக்குநர் கோகுல், இப்படத்தில் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களை பணியாற்ற வைக்க உள்ளாராம். தற்போது அவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், இறுதியானவுடன் அவர்கள் யார் என்பதை அறிவிக்க இருக்கிறார்கள்.
விஜய் சேதுபதி நடித்த படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவாகும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் தொடங்குகிறது.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...