மார்ச் மாதம் வெளியாகும் ‘கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்’!
Monday February-25 2019

பல பிரபல இயக்குநர்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் சீ.வி.குமார் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்’.

 

பலரின் பாரட்டை பெற்ற "மாயவன்" திரைப்படத்திற்கு பிறகு சீ.வி.குமார் இயக்கும் இரண்டாவது படம் இது.

 

தேவைகள் ஆசையாக மாறும் போது அதனால் ஏற்படும் விளைவுகளே ’கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ படத்தின் கதைக்கரு.

 

பிரியங்கா ருத் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க  அஷோக், வேலு பிரகாகரன், டேனியல் பாலாஜி, ஆடுகளம் நரேன், பகவதி பெருமாள் (பக்ஸ்) டைரக்டர் ராம்தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

 

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாக அனைவரின் பாராட்டையும் பெற்று, படத்திற்காக எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ளது. இப்படம் மார்ச் வெளியீடாக வரும் என எதிர்பார்க்கபடுகிறது . 

 

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

 

தயாரிப்பு, இயக்கம் - சீ.வி.குமார் (திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்)

இசை - ஹரி டஃபுசியா

இசை (OST) - ஷ்யமளங்கன்

இசை மேற்பார்வை  - சந்தோஷ் நாராயணன்

ஒளிப்பதிவு - கார்த்திக் K தில்லை

படத்தொகுப்பு - ராதாகிருஷ்ணன் தனபால்

கலை - விஜய் ஆதிநாதன், சிவா

சண்டைப்பயிற்சி - ஹரி தினேஷ்

சவுண்ட் டிசைன் - தாமஸ் குரியன்

நடனம் - சாண்டி

மக்கள் தொடர்பு - நிகில்

நிர்வாக தயாரிப்பு - S.சிவகுமார்

Related News

4274

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery