மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பலர் திரைப்படமாக எடுத்து வருகிறார்கள். அதில் இயக்குநர் விஜயுடம் ஒருவர். இவர் இயக்க இருக்கும் ஜெயலலிதா வாழ்க்கை படத்திற்கு ‘தலைவி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 ஆம் தேதி இப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும், இப்படத்திற்காக ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கிடம் இருந்து இப்படத்திற்காக என்.ஓ.சி பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் குறித்து இயக்குநர் விஜய் கூறுகையில், “’தலைவி’ என்ற தலைப்புக்கு அவரை விட யார் பொருத்தமாக இருக்க முடியும் "தலைவர்கள் பிறப்பதில்லை, உருவாகிறார்கள்" என்ற ஒரு புகழ்பெற்ற மேற்கோள் உள்ளது. ஜெயலலிதா மேடம் அத்தகைய தத்துவத்திற்கும் அப்பாற்பட்டவர், அவர் பிறப்பிலேயே அத்தகைய தலைமைப் பண்புகளை பெற்றவர். அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, அனுபவம் மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவை ஒரு தலைவரை உருவாக்கும் குணங்கள் என்றால், அவர் பிறப்பிலேயே அந்த குணங்களை பெற்றவர். இந்த குணாதிசயங்களால் தான் நாம் அனைவரும் அவரை 'அம்மா' என்று வணங்குகிறோம். இத்தகைய உயர்ந்த தலைவரின் தைரியமே என்னை மிகவும் கவர்ந்தது. அதனால் தான் இந்த படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தவுடனேயே எந்த யோசனையும் இல்லாமல் ஒப்புக் கொண்டேன். மிக நேர்மையான ஒரு வரலாற்று படமாக இதை கொடுக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது, அதற்காக கடுமையாக உழைத்து வருகிறேன்.

இந்த 'தலைவி' தலைப்பை வெளியிட அவரது பிறந்த நாளை விட மிகச்சரியான தருணம் ஏதும் இல்லை. எங்களுக்கு இந்த படத்தை உருவாக்க தடையில்லா சான்று கொடுத்த ஜெயலலிதா அம்மா அவர்களின் அண்ணன் மகன் திரு.தீபக் அவர்களுக்கு நன்றி. இந்த படத்துக்கான கதை ஐடியாவை கொண்டு வந்ததோடு, இன்றும் எனக்கு ஆதரவாக இருந்து வருகிறார் விப்ரி மீடியா தயாரிப்பாளர் விஷ்ணுவர்தன் இந்தூரி. அர்த்தமுள்ள மற்றும் நேர்மையான வாழ்க்கை வரலாற்று படங்களை கொடுக்கும் அவரது நோக்கம் எனக்கு நிறைய உத்வேகம் கிடைத்துள்ளது. இந்த தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை ரசிகர்கள் பொக்கிஷமாக நீண்ட காலத்துக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார்கள். பாகுபலி எழுத்தாளர் திரு விஜயேந்திர பிரசாத் இந்த படத்தில் இணை கதாசிரியராக இணைகிறார் என அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவரின் பங்களிப்பு இந்த படத்துக்கு கூடுதல் மதிப்பை சேர்க்கும். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். என் படங்களில் மிகச்சிறந்த ஹிட் பாடல்களை கொடுத்த ஜிவி பிரகாஷ் குமார் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். மதன் கார்க்கி பாடல்கள் எழுதுகிறார். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்படும்.” என்றார்.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...
2026-ம் ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்ப்பு மிக்க படங்களுல் ஒன்றாகக் கருதப்படும், ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ (Toxic: A Fairytale for Grown-ups), திரைப்படத்தில், கியாரா அத்வானி (Kiara Advani) ஏற்றுள்ள ‘நாடியா’ (Nadia) கதாபாத்திரத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு அதிகாரபூர்வமாக சமீபத்தில் வெளியிட்டது...
உலகம் முழுவதும் உள்ள படைப்பாளிகளுக்கு நேரடியாக தயாரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை அடையும் வாய்ப்பை உருவாக்கி கொடுக்கும் விதத்தில், ’தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் இன்டர்நேஷனல்’ (The Script Craft International Short Film Festival) என்ற தலைப்பில் குறும்பட போட்டி ஒன்று தொடங்கியுள்ளது...