ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் மூன்று படங்களில் ஹீரோவாக நடிக்க ஜெயம் ரவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
மிகவும் மகிழ்ச்சிகரமான இந்த செய்தியை பகிர்ந்து கொள்ளும் ஜெயம் ரவி கூறும்போது, "நான் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனதை விட, பல நல்ல திரைப்படங்களை தயாரிக்க ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் காட்டும் பேரார்வம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த மாதிரியான தயாரிப்பு நிறுவனங்கள் உண்மையில் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு வரம். தமிழ் சினிமாவின் என் நண்பர்கள் யாராவது இந்த மாதிரி 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தாலும் நான் மகிழ்ச்சியடைந்திருப்பேன். நான் கவனித்த வகையில் இந்த நிறுவனம் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்களை கண்டு நான் வியந்திருக்கிறேன். அவர்கள் நல்ல கதையம்சம் உள்ள படங்களை வெளியிடுவது மற்றும் அதை மிகச்சிறப்பாக விளம்பரப்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்ப்பது வரை மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார்கள். அந்த வகையில், இவர்கள் தேர்ந்தெடுக்கும் கதை மற்றும் கதாபாத்திரங்களில் நடிக்க நான் ஆர்வமாக உள்ளேன். நிச்சயமாக, ஆக்கப்பூர்வமான, வித்தியாசமான கதைகளுக்கு என்னைத் தேர்ந்தெடுத்த திரைப்பட இயக்குநர்கள் இல்லையெனில் இது சாத்தியமில்லை. அவர்களின் நீண்ட பயணத்தின் ஒரு அங்கமாக இருக்க என்னை தேர்ந்தெடுத்ததற்காக ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தினர் அனைவருக்கும் நான் என் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயம் பல மடங்கு பலனை திருப்பி தரும் என நான் உறுதியாக நம்புகிறேன்" என்றார்.
90களின் இறுதியில் மற்றும் 2000களின் தொடக்கத்தில் தனது மென்மையான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்த நடிகர் அபாஸ், பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பி வருகிறார்...
புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...
விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் “சக்தித் திருமகன்”...