Latest News :

சீனாவில் படமாக்கப்பட்ட ‘எங் மங் சங்’ பட ஆக்‌ஷன் காட்சிகள்!
Tuesday February-26 2019

பிரபு தேவா, லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகும் ‘எங் மங் சங்’ படத்தை வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் இணைந்து தயாரிக்கிறார்கள்.

 

இதில் இயக்குநர் தங்கர் பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, சித்ரா லட்சுமணன், கும்கி அஸ்வின், காளி வெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா ஆகியோர் நடிக்க, இவர்களுடன் பாகுபலி வில்லன் பிரபாகர் வில்லனாக நடிக்கிறார்.

 

ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அம்ரீஷ் இசையமைக்கிறார். பிரபுதேவா, மு.ரவிகுமார் பாடல்கள் எழுத, பாசில் - நிரஞ்சன் எடிட்டிங் செய்கிறார்கள். ஸ்ரீதர், நோபல் நடனம் அமைக்க, சில்வா ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி அர்ஜுன் எம்.எஸ். இயக்குகிறார்.   

 

கும்பகோணம், பொள்ளாச்சி, ஆந்திரா, கர்நாடகா போன்ற இடங்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்த ‘எங் மங் சங்’ சீனாவில் உள்ள டெங் லெங் என்ற இடத்தில் ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கியுள்ளார்கள்.   

 

குங்பூ மற்றும் சைனீஸ் ஸ்டண்ட் பற்றிய காட்சிகளில் பிரபு தேவா வில்லன்களுடன் மோத, சண்டைப்பயிற்சியாளர் சில்வா படமாக்கினார். 

 

1980 கால கட்டத்தில் நடப்பது மாதிரியான கதையம்சம் கொண்ட படம் என்பதால் ‘எங் மங் சங்’ படக்குழு ரொம்பவே மெனக்கெட்டு பணியாற்றி வருகிறார்கள்.

Related News

4282

’45’ படம் தனி உலகம்! – நடிகர் சிவராஜ்குமார் கூறிய சுவாரஸ்ய தகவல்
Monday December-22 2025

சுரஜ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...

பிரபல ஆபரண நிறுவனத்தின் விளம்பரத் தூதரான நடிகர் துல்கர் சல்மான்!
Monday December-22 2025

60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...

சென்னையைக் கவர்ந்த டொயோட்டாவின் ’டிரம் டாவோ’ இசை நிகழ்ச்சி!
Monday December-22 2025

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...

Recent Gallery