விஜய் ஆண்டனிக்கு ஜோடியான ரம்யா நம்பீசன்!
Tuesday February-26 2019

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘தமிழரசன்’. இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மற்றும் சோனு சூட் முக்கிய வில்லன் வேடம் ஏற்கிறார். பூமிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த், ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்.

 

ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க, பழனிபாரதி, ஜெய்ராம் பாடல்கள் எழுதுகிறார்கள். மிலன் கலையை நிர்மாணிக்க, அனல் அரசு ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார். புவன் சந்திரசேகர் எடிட்டிங் செய்ய, பிருந்தா, சதீஷ் நடனம் அமைக்கிறார்கள்.

 

பாபு யோகேஸ்வரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு 15 நாட்கள் சென்னையில் நடைபெற்றது. விஜய் ஆண்டனி -  ரம்யா நம்பீசன் சம்மந்தப் பட்ட காட்சிகள் மற்றும் விஜய் ஆண்டனி வில்லன் சோனு சூட் மோதும் ஆக்‌ஷன் காட்சிகள் படமானது.

 

அத்துடன் 1000 கல்லூரி மாணவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம்  மற்றும் போராட்டக் காட்சிகளை   4 காமிராக்களை கொண்டு ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கினார். இந்த காட்சிகள் திரையில் மிகப் பெரிய பிரமிப்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

Related News

4283

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery