தெலுங்கு சினிமா பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி, தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலர் மீதும் அதே புகார்களை கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். பிறகு அவர் புகார் கூறியவர்களில் ஒருவரான ராகவா லாரன்ஸ், படத்தில் வாய்ப்பு கொடுத்தார். மேலும் சில தமிழ்ப் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற ஸ்ரீரெட்டி, சில காலம் பாலியல் புகார் கூறாமல் இருந்தார்.
இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல தெலுங்கு இயக்குநர் கொரட்டல சிவா ”காமசூஸ்த்ராவின் குரு” என்று கூறியதோடு, முகம் தெரியாத ஆணும், பெண்ணும் அறைகுறை ஆடையில் நெருகமாக இருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டார்.
இந்த நிலையில், தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான நானி மீது ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கூறிய ஸ்ரீரெட்டி, ”நானி திருமணம் ஆகாமல் இருந்த போது என்னுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்தார். வாய்ப்பு தருவதாக கூறி என்னுடன் செக்ஸ் வைத்துக்கொள்வார். என் கேரியருக்கு உதவுவார் என நினைத்தேன், ஆனால் நடக்கவில்லை. மது, புகை, பெண் என அனைத்து பழக்கமும் அவருக்கு உண்டு. ஒருமுறை மது பாட்டில்களுடன் என் வீட்டுக்கு வந்தார். நான் அவரை எச்சரித்து அனுப்பினேன்.” என்று தெரிவித்துள்ளார்.

தற்போது சென்னையில் முகாமிட்டுள்ள ஸ்ரீரெட்டி, மீண்டும் தெலுங்கு சினிமா பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூற தொடங்கியிருப்பது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...