Latest News :

’சாதனை பயணம்’ மூலம் கோடம்பாக்கத்தில் உதயமான புதிய நட்சத்திரம் ‘கலக்கல் ஸ்டார்’ பரமேஸ்வரர்
Wednesday February-27 2019

விஜியாலயா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘சாதனை பயணம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் புதிய நட்சத்திரமாக உதயமாகிறார் கலக்கல் ஸ்டார் பரமேஸ்வரர். இப்படத்தில் ஹீரோவாக நடிப்பதோடு, படத்தையும் தயாரிக்கும் பரமேஸ்வரர், ‘காதல் டாட்காம்’, ‘த்ரி ரோசஸ்’, ‘மேடை’, ‘பீஸ்மர்’ உள்ளிட்ட சுமார் 15 க்கும் மேற்பட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறார்.

 

சினிமா மீது உள்ள ஆர்வத்தால் 13 வயதிலேயே சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தவர், சினிமாவில் பல பணிகளை செய்து வந்த நிலையில், தற்போது ‘சாதனை பயணம்’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இவருடன் அழகு, எஸ்.கே.எம்.பாண்டியன், தமிழடியான், முகேஷ், லிபாலி பரமேஸ்காந்த், கருப்பு ராஜா, சக்திவேல், வாண்யா, ஜெய்கோபி, குமார், சங்கீதா, ஹரிப்பிரியா, விகாசினி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

 

இசையரசர் தஷி இசையமைக்கும் இப்படத்திற்கு மகேஷ் சுப்ரமண்யம் ஒளிப்பதிவு செய்கிறார். செல்வராஜ் எடிட்டிங் செய்ய, அக்‌ஷய் ஆனந்த், கூல் ஜெயந்த், பவர் சிவா ஆகியோர் நடனம் அமைக்கிறார்கள். கவிஞர் முத்துலிங்கம், முனைவர் சி.வீரமணி, சொ.சிவக்குமார், கலை வேந்தன், சுதந்திரதாஸ் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளார்கள். சாய் மணி ஆக்‌ஷன் காட்சிகளை வடிமைக்கிறார். தயாரிப்பு நிர்வாகத்தை சின்னமணி கவனிக்கிறார். 

 

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் மாதேஷ்வரா, படம் குறித்து கூறுகையில், ”மனிதர்களின் வாழ்க்கையே ஒரு சாதனை பயணம் தான். அந்த வகையில், சாதாரண விவசாயி தனது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சமாளித்து தனது வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார், என்பது தான் படத்தின் கதை. இதில், பிள்ளைகள் வளர்ந்ததும் பெற்றோர்களை கைவிட்டு விடுவது பற்றியும், பேசியிருக்கிறோம். வானத்தை போல, சேது போன்ற படங்களின் வரிசையில் உணர்வுப்பூர்வமான படமாக சாதனை பயணம் உருவாகியுள்ளது.

 

இப்படத்தை பார்க்கும் பிள்ளைகள் தங்களது பெற்றோர்கள் மீது அதிகமான அன்பும், அக்கறையும் காட்டுவார்கள் என்பது உறுதி.” என்றார்.

 

ஹீரோ பரமேஸ்வரருக்கு ஹீரோவாக இது தான் முதல் படம் என்றாலும், இப்படத்தின் சண்டைக் காட்சிகளில் ஒரிஜினலாக நடித்திருக்கிறார். மெத்தை, ரோப் என்று எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், சண்டைக்காட்சிகளில் இவர் நடித்ததை பார்த்து ஒட்டு மொத்த படக்குழுவும் பாராட்டு தெரிவித்தது. அப்படி ஒரு சண்டைக்காட்சியில் முழுக்க முழுக்க தண்ணீரில் இருந்தபடியே சண்டை போடும் போது, அவரது கைவிரல் உடைத்து போனாலும், அந்த வலியையும் தாங்கிக் கொண்டு பரமேஸ்வரர் பட்டையை கிளப்பியிருக்கிறார்.

 

இப்படத்திற்காக தஷி இசையமைத்திருக்கும் 6 பாடல்களும் மிக சிறப்பாக வந்திருப்பதோடு, பின்னணி இசையும் படத்திற்கு பெரும் பலம் சேர்க்கும் விதத்தில் உருவாகி வருகிறதாம். படத்தின் காட்சிகளையும், ஹீரோவின் பர்பாமன்ஸையும் பார்த்து வியந்த இசையமைப்பாளர் தஷி, ‘கலக்கல் ஸ்டார்’ என்ற பட்டத்தை பரமேஸ்வரரருக்கு வழங்கி கெளரவித்துள்ளார்.

 

தற்போது டாக்கி போஷன்களை முடித்துவிட்டு பாடல்களை படமாக்க தயராகியுள்ள ‘சாதனை பயணம்’ படக்குழுவினர் படத்தினை கோடை விடுமுறையில் வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.

Related News

4288

ஷேனிடம் நிறைய கற்றுக் கொண்டேன் - நடிகர் சாந்தனு
Saturday September-20 2025

தயாரிப்பாளர் சாந்தோஷ் டி.குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி...

நடிகர் ரோபோ சங்கர் மறைவு! - திரையுலகம் அதிர்ச்சி
Thursday September-18 2025

பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...

ஜீ5-ன்‘வேடுவன்’ இணையத் தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது
Wednesday September-17 2025

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ  அறிவிப்பை வெளியிட்டுள்ளது...

Recent Gallery