பல அரசியல் குழப்பங்கள், பொருளாதார சிக்கல்கள், வாழ்வாதாரத்துக்கான போராட்டங்கள் என தொடர்ந்து தமிழ்நாடு சிக்கல்களை சந்தித்து வரும் வேளையில், இதனை பிரதிபலிக்கும் வகையில் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’என்ற திரைப்படம் தயாராகி வருகிறது.. இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி நல்.செந்தில்குமார் இயக்கி வருகிறார்.
அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு கிராமத்தில் இதுவரை எந்த தலை முறையும் சந்திக்காத, பார்க்காத பல்வேறு மர்மமான சம்பவங்களும், பிரச்சனைகளும் அடுத்தடுத்து தொடர்ந்து நடக்கின்றது. ஒரு கட்டத்தில் பிரச்சனைகள் தீவிரமடைந்து மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களுக்கு என்ன காரணம் என்பதை கதாநாயகன் கண்டு பிடித்து தனது கிராமத்தையும் மக்களையும் எப்படி காப்பாற்றினார் என்பதை சஸ்பென்ஸ், திரில்லர் கலந்து விறுவிறுப்பான திரைக் கதையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் கூறுகிறார்.. ஜி.எஸ். ஆர்ட்ஸ் சார்பில் பூக்கடை ஜி.சேட்டு தயாரிக்கும் இத்திரைப்படத்தில் கதை நாயகனாக மகேந்திரன் ஊர் மக்களுக்கு உதவி செய்வதையே முழு நேர வேலையாக கொண்டு பணம் சம்பாதிக்கும் இளைஞனாக புதிய தோற்றத்தில் நடித்திருக்க்கிறார். இப்படம் மகேந்திரனுக்கு திருப்புமுனையாக இருக்கும் என இயக்குனர் கூறுகிறார்.
அவருக்கு ஜோடியாக மியாஸ்ரீ நடித்திருக்கிறார். இவர்களுடன் R.சுந்தர்ராஜன், மனோஜ் குமார், பசங்க சிவக்குமார், அப்புக் குட்டி, தவசி, பெஞ்சமின், லொள்ளு சபா உதயா, மீரா கிருஷ்ணன்,ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு ஜெ.ஆர்.கே,, படத்தொகுப்பு கம்பம் மூர்த்தி கவனிக்க, தினா மற்றும் ரமேஷ் நடன இயக்குனராகவும், மிரட்டல் செல்வா ஸ்டண்ட் இயக்குனராகவும் பணி புரிந்துள்ளனர். பாடல்களை ஜீவன் மயில், மோகன்ராஜ் எழுத, விஜய் டி.வி. புகழ் செந்தில்கணேஷ், ராஜ லெட்சுமி மற்றும் ஆத்தங்குடி இளையராஜா, சித்தின், நமீதா இவர்களுடன் சேர்ந்து தேனிசைத் தென்றல் தேவாவும் பாடல்களைப் பாட, ஸ்ரீகாந்த்தேவா இசை அமைத்துள்ளார். ஜி.எஸ். ஆர்ட்ஸ் சார்பில் இப்படத்தை பூக்கடை ஜி.சேட்டு தயாரித்துள்ளார்.
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...
2026-ம் ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்ப்பு மிக்க படங்களுல் ஒன்றாகக் கருதப்படும், ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ (Toxic: A Fairytale for Grown-ups), திரைப்படத்தில், கியாரா அத்வானி (Kiara Advani) ஏற்றுள்ள ‘நாடியா’ (Nadia) கதாபாத்திரத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு அதிகாரபூர்வமாக சமீபத்தில் வெளியிட்டது...