பெரும்பாலானோரால் எதிர்பாக்கப்பட்ட ஹிப்ஹாப் தமிழா நடிக்கும் நட்பே துணை படத்தின் ட்ரைலர் நாளை (பிப்.28) வெளியாகும். இப்படத்தின் அறிவிப்பு வெளியானத்திலிருந்தே அனைவரின் கவனத்தையும் பெருமளவில் ஈர்த்தது. இப்படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி இசை உலகிலும், இணையதளங்களிலும் மக்களைத் தன் வசப்படுத்தியது. இப்போது ட்ரைலரும் மகிழ்விக்க வருகிறது. இப்படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டி. பார்த்திபன் தேசிங்கு. ஹிப்ஹாப் தமிழா ஆதியின் காதலியாக அனகா நடிக்கிறார். இப்படம் அடிப்படையாகக் கொண்டு உருவானாலும் குடும்பம், நட்பு, காதல், நகைச்சுவை மற்றும் சென்டிமென்ட் என அனைத்தும் கலந்து இருக்கிறது.
விக்னேஷ் காந்த், பாண்டியராஜன், கௌசல்யா, 'எரும சாணி' புகழ் விஜய், ஹரிஷ் உத்தமன், ஷாரா, 'பழைய ஜோக்' தங்கதுரை, அஜய் கோஷ், சுட்டி அரவிந்த், வினோத், புட் சட்னி (Put Chutney) புகழ் ராஜ்மோகன், பிஜிலி ரமேஷ் மற்றும் அஸ்வின் ஜெரோமி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
தொழில்நுட்ப கலைஞர்கள் - ஒளிப்பதிவு - டிமாண்டி காலனி மற்றும் இரவுக்கு ஆயிரம் கண்கள் புகழ் அரவிந்த் சிங், படத்தொகுப்பு - பென்னி ஆலிவர், கலை - பொன்ராஜ், நடனம் - சந்தோஷ் மற்றும் சிவராக் ஷங்கர், சண்டை பயிற்சி - பிரதீப் தினேஷ், தயாரிப்பு - சுந்தர்.சி -ன் அவ்னி மூவிஸ்.
90களின் இறுதியில் மற்றும் 2000களின் தொடக்கத்தில் தனது மென்மையான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்த நடிகர் அபாஸ், பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பி வருகிறார்...
புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...
விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் “சக்தித் திருமகன்”...