Latest News :

விஜய் தேவரகொண்டாவின் ‘அர்ஜுன் ரெட்டி’! - மார்ச் 15 ஆம் தேதி ரிலீஸ்
Wednesday February-27 2019

மொழிமாற்றுப் படங்களை தமிழில் வெளியிடுவதில் வெற்றி கண்டு வருபவர் ஏ.என்.பாலாஜி. சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சவுத்ரி தயாரித்த படங்களின்  தெலுங்கு வியாபாரத்தை கவனிக்க தொடங்கியவர், பின்னர் மொழிமாற்று திரையீட்டு தொழிலுக்கு மாறினார். லவ் டுடே முதல் ரகளை வரை சூப்பர் குட் பிலிம்ஸ் தெலுங்கில் தயாரித்த படங்களை வியாபாரம் செய்தவர். சூப்பர் குட் நிறுவனத்தை கோவில் என்றும் சவுத்ரியை கடவுள் என்றும் நன்றியோடு நினைப்பவர். 

 

மகேஷ் பாபுவின் 'பிசினஸ் மேன்' ,'நம்பர் ஒன்', பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர், நயன்தாரா படங்கள் மற்றும்  நாகார்ஜூனாவின் 10 படங்கள், சைதன்யா படங்கள் என வளரந்து இப்போது விஜய் தேவரகொண்டா படங்களை மொழிமாற்றி வெளியிட்டு வருகிறார். 

 

அந்த வரிசையில் மார்ச்  15 ஆம் தேதி வெளியாகிறது விஜய் தேவரகொண்டா - பூஜா ஜாவேரி நடித்த 'அர்ஜூன் ரெட்டி' படம். இது 'துவாரகா' தெலுங்கு படத்தின் தமிழ் வடிவம்.

 

விஜய் தேவரகொண்டாவை வைத்து  சூப்பர் குட் நிறுவனம் தயாரித்த இந்த படம் ஆந்திரா முழுக்க 100 நாட்களை தாண்டி ஓடி வெற்றி பெற்ற படம்.

 

இது குறித்து கூறிய பாலாஜி, “சமீபத்தில் வெளியான விஜய் தேவரகொண்டாவின் கீத கோவிந்தம் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.அவருக்கு தென்னிந்தியா முழுவதும் இளம் ரசிகர்கள் பெருகி வருகிறார்கள்.விஜய சாந்தி,  சிரஞ்சீவி, மகேஷ் பாபு  தொடங்கி நல்ல மொழிமாற்றுப் படங்களை தமிழ் ரசிகர்கள் வரவேற்று வெற்றி பெற வைத்திருக்கிறார்கள்.

 

எங்களது அர்ஜூன் ரெட்டி படமும் சூப்பர் குட் தயாரித்த  அனைத்து படங்களை போல இதுவும் அருமையான கதையம்சம் கொண்ட படம். ஐந்து சூப்பர் ஹிப் பாடல்கள் இந்த படத்தில் உள்ளன.” என்றார்.

 

விஜய் தேவர்கொண்டா நாயகனாக நடிக்கிறார். நாயகியாக பூஜா ஜவேரி  நடிக்கிறார். மற்றும் பிரகாஷ்ராஜ், பாகுபலி பிரபாகர், முரளிசர்மா, சுரேகா வாணி ப்ரிதிவிராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவு - ஸ்யாம் கே.நாய்டு, இசை - சாய்கார்த்திக், பாடல்கள் - நெல்லை பாரதி, எடிட்டிங் - பிரேம், தயாரிப்பு - ஏ.என்.பாலாஜி, வசனம் - ஆண்டனி ரிச்சர்ட், கதை, திரைக்கதை, இயக்கம் -  ஸ்ரீனிவாச ரவீந்திரா.

Related News

4296

ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் மூலம் மீண்டும் திரைபயணத்தை தொடங்குகிறார் அபாஸ்!
Friday July-25 2025

90களின் இறுதியில் மற்றும் 2000களின் தொடக்கத்தில் தனது மென்மையான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்த நடிகர் அபாஸ், பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பி வருகிறார்...

‘கேப்டன் பிரபாகரன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Friday July-25 2025

புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...

’சக்தித் திருமகன்’ படம் மூலம் அரசியல் புரோக்கரான விஜய் ஆண்டனி!
Friday July-25 2025

விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் “சக்தித் திருமகன்”...

Recent Gallery