தமிழ் சினிமாவின் தற்போதைய நம்பர் ஒன் காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, காமெடி வேடங்களில் நடிப்பதை தொடர்ந்து கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வரிசையில் பிரபல திரைப்பட நிறுவனம் யோகி பாபுவை கதையின் நாயகனாக வைத்து படம் ஒன்றை தயாரிக்கிறது.
ரஜினி, கமல், விஜய் என பல முன்னணி நடிகர்களின் பிரம்மாண்ட படங்களை தயாரித்து வரும் லைகா நிறுவனம் தான் யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் படத்தை தயாரிக்கிறது. ‘பன்னிக்குட்டி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் கருணாகரன், சிங்கம்புலி, திண்டுக்கல் லியோனி, டி.பி.கஜேந்திரன், லக்ஷ்மி ப்ரியா, ராமர், பழைய ஜோக் தங்கதுரை என பல காமெடி நடிகர்கள் நடிக்கிறார்கள்.
அனுசரண் முருகையா இயக்கும் இப்படத்திற்கு கே என்கிற கிருஷ்ணகுமார் இசையமைக்கிறார். சதிஷ் முருகன் ஒளிப்பதிவு செய்ய, என்.ஆர்.சுகுமாரன் கலையை நிர்மாணிக்கிறார். எம்.அனுசரண் படத்தொகுப்பை கவனிக்கிறார்.
90களின் இறுதியில் மற்றும் 2000களின் தொடக்கத்தில் தனது மென்மையான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்த நடிகர் அபாஸ், பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பி வருகிறார்...
புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...
விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் “சக்தித் திருமகன்”...