Latest News :

நான் செய்யாததை ஆதி செய்திருக்கிறார்! - சுந்தர்.சி பெருமிதம்
Friday March-01 2019

’மீசையை முறுக்கு’ படத்தை தொடர்ந்து ஹிப் ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடித்து இசையமைக்கும் படம் ‘நடபே துணை’ அவரது முதல் படத்தை தயாரித்த இயக்குநர் சுந்தர்.சி தான் இப்படத்தையும் தனது அவ்னி கிரியேஷன்ஸ் மூலம் தயாரித்திருக்கிறார்.

 

தேவேஷ், பிரதீப் தினேஷ் ஆகியோர் கதை, திரைக்கதை எழுத பார்த்திபன் தேசிங்கு இப்படத்தை இயக்கியிருக்கிறார். இதில் ஹீரோயினாக அனகா என்ற புதுமுக நடிக்க, ஹரிஷ் உத்தமன், விக்னேஷ் காந்த், எரும சாணி விஜய்குமார், சுட்டி அரவிந்த், ராஜ்மோகன், வினோத், குகன், தங்கதுரை, பிஜிலி ரமேஷ், பாலாஜி, அஜித், பூவேந்தன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் சுந்தர்.சி, ஹிப் ஹாப் தமிழா, இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு, ஆதி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் ஹிப் ஹாப் ஆதி பேசுகையில், “அதிக வாய் பேசிய என்னை 'ஆம்பள' யில் அறிமுகப்படுத்தி, 'மீசைய முறுக்கு'-ல் என் கனவை நனவாக்கி 'நட்பே துணை'யில் இப்படியொரு வாய்ப்பை கொடுத்த சுந்தர்.சி அண்ணாவுக்கு நன்றி. 

 

இப்படத்தின் கதையைக் கூறும்போதே பெரிய தொகை செலவாகும் என்று தெரிந்தது. சுந்தர்.சி அண்ணாவிடம் கூறியதும் தயாரிக்க சம்மதித்தார். 

 

மீசைய முறுக்கு படத்தில் இருக்கும் மொத்த குழுவும் இணைந்து பணியாற்றியிருக்கிறோம். தேவேஷ் மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் அவர்களின் வேலையை ஒத்திவைத்து எனக்காக இப்படத்தை முடித்துக் கொடுத்தார்கள். 

பள்ளியில் கூடைப்பந்து விளையாடியிருக்கிறேன். இப்படத்திற்காக ஹாக்கி விளையாடியிருக்கிறேன். இதில் இரண்டு குழுவில் 22 பேரில் 10 பேர் நிஜ ஹாக்கி வீரர்கள். அவர்களுக்கு இணையாக விளையாட வேண்டும் என்பதற்காக தீவிரமாக பயிற்சி எடுத்தோம். அதற்காக ஹாக்கி பயிற்சியாளர் குணசீலன் பயிற்சியளித்தார். ஒருநாள் 'ஹாக்கி ஸ்டிக்' என்று கூறுவதற்கு பதில் 'பேட்' என்று கூறிவிட்டேன். அதற்காக இரண்டு சுற்று ஓட விட்டார். எங்களுடன் அனகாவும் காலில் அடிபட்டும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டார். இப்படத்தின் கடைசி 35 நிமிடங்கள் எங்களுடைய அர்ப்பணிப்பு அனைவருக்கும் தெரியும்.

 

'மீசைய முறுக்கு' படத்தின் வெளியீட்டிருக்காக கோயம்புத்தூருக்கு சென்ற போது 'எரும சாணி' விஜய்யின் அறிமுகம் கிடைத்தது. 

 

கரு.பழனியப்பன் முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடைய கதாபாத்திரம் எல்லோராலும் பேசப்படும்.

 

மது, புகை இல்லாமல் இப்படம் இருக்க வேண்டும் என்று இயக்குநரிடம் கேட்டுக்கொண்டேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டு படமெடுத்தார். குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் சென்று பார்க்ககூடிய படமாக இருக்கும்.” என்றார்.

 

இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு பேசுகையில், “இப்படத்தை பற்றி குறிப்பிட்டு யாரையும் கூற முடியாது. படத்தை விளையாட்டு களமாக தேர்ந்தெடுத்திருக்கிறோம். புதுமையான களமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாண்டிசேரியைத் தேர்ந்தெடுத்தோம். அந்த களத்தில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 3,000 ரூபாய் கட்டணம் கொடுத்து பயிற்சியளித்தோம். சாதாரண களத்தில் விளையாடுவதை விட ஹாக்கி டர்ஃபில் விளையாடுவது மிகவும் கடினம். நிஜ வீரர்களுக்கே தொடர்ந்து விளையாடுவது இயலாது. அப்படி இருக்கையில் இவர்கள் அனைவரும் நாள் முழுக்க இடைவிடாமல் நடித்தார்கள். தினமும் ஒருவர் மயங்கி விழுவார். ஆதிக்கு கழுத்தில் அடிபட்டும் மனம் தளராமல் சிறிது இடைவெளியில் மீண்டும் நடித்து முடித்தார். மேலும் இப்படத்தில் நடித்த அனைவருமே தங்களுடைய சொந்த படமாக நினைத்து பணியாற்றினார்கள். 

 

பாண்டிச்சேரியில் இருப்பவர்கள் என்றாலே மது அருந்துவார்கள், புகை பிடிப்பார்கள் என்ற ஒரு தவறான எண்ணம் எல்லோர் மனதிலும் நிலவும். ஆனால் இப்படத்தில் பாண்டிச்சேரியில் இருக்கும் இளைஞர்கள் பெருமை படலாம்.” என்றார்.

 

Natpe Thunai

 

தயாரிப்பாளர் இயக்குநர் சுந்தர்.சி பேசுகையில், “இணையதளத்தில் பார்த்த பலரை இன்று நேரில் பார்க்கிறேன். 'எரும சாணி' விஜய்யை எனக்கு பிடிக்கும். நகைச்சுவையில் மிகப்பெரிய இடத்தைப் பிடிக்கக் கூடிய திறமை அவருக்கு இருக்கிறது. ஆனால் அவரை கதாநாயகனாக உருவாக்கிவிடுவார்கள். சிறிது காலத்திற்கு நகைச்சுவையில் வெற்றி பெற்று, அதன்பிறகு நாயகனாகலாம். 

 

ஒருநாள் காரில் சென்று கொண்டிருக்கும் போது அனகா தெருவோரத்தில் தீவிரமாக ஹாக்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அதைப் பார்த்ததும் இப்படத்தை அவருக்காகவே சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று கூறினேன்.

 

என் மனைவியிடம் மீசைய முறுக்கு படம் வெற்றியடைந்தால் ஆதிக்கு வெளி வாய்ப்புகள் தேடி வரும். ஒருவேளை படம் சரியாகப் போகவில்லையென்றால் அடுத்த படத்தை ஆதியை வைத்தே எடுப்போம் என்று கூறியிருந்தேன். ஆனால் படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. நான் நினைத்தது போலவே வெளி வாய்ப்புகள் வந்தன. அப்போது நான் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் இருந்தேன். ஆதி என்னைத் தொடர்பு கொண்டு, ஒரு கதை இருக்கிறது கேளுங்கள் என்றார். கதையைக் கேட்கும் போதே மிகவும் பிடித்திருந்தது. என் படத்தில் கருத்து சொல்லக்கூடிய படத்தைக் கொடுக்க முடியவில்லை. அதை ஆதி செய்ததால் இப்படத்தை தயாரிக்க முடிவு செய்தேன். ஆனால், பாடல்கள் மட்டும் நன்றாக வரவேண்டும் என்று ஒரு நிபந்தனை மட்டும் வைத்தேன். அதேபோல் மூன்று பாடல்களும் இணையத்தில் வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது.

 

மேலும், இயக்குநர் பார்த்திபன் தேசிங்குவிடம் பிடித்த விஷயம் என்னவென்றால், இதுவரை பாண்டிச்சேரியை பற்றிய படம் வந்ததில்லை. அவர் கதை கூறும்போதே பாண்டிச்சேரியைப் பற்றிக் கூறியது பிடித்திருந்தது. ஆகையால் செலவைப் பற்றி கவலைப்படாமல் படம் தரமானதாக இருந்தால் போதும் என்று அவர்களிடமே விட்டுவிட்டேன்.” என்றார்.

 

ஹாக்கி விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருப்பதோடு, படமும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Related News

4301

’45’ படம் தனி உலகம்! – நடிகர் சிவராஜ்குமார் கூறிய சுவாரஸ்ய தகவல்
Monday December-22 2025

சுரஜ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...

பிரபல ஆபரண நிறுவனத்தின் விளம்பரத் தூதரான நடிகர் துல்கர் சல்மான்!
Monday December-22 2025

60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...

சென்னையைக் கவர்ந்த டொயோட்டாவின் ’டிரம் டாவோ’ இசை நிகழ்ச்சி!
Monday December-22 2025

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...

Recent Gallery