பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழகத்தின் இளவரசியாகவே மாறிய ஓவியா, எங்கு போனாலும் பெரும் கூட்டம் கூடியதோடு, சமூக வலைதளங்களிலும் அவருக்கென்று ஆர்மியும், பேன்ஸும் ஏராளமாக சேர்ந்தார்கள். ஒரு பக்கம் கடை திறப்பு உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் பணம் பார்க்க தொடங்கியவர், மறுபக்கம் ஏகப்பட்ட திரைப்படங்களின் வாய்ப்புகளையும் பெற்று வந்தார்.
இதற்கிடையே, ஓவியா நடிப்பில் நேற்று வெளியான ‘90 எம்.எல்’ என்ற திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே பெரும் சர்சையில் சிக்கிய நிலையில், தற்போது படத்தை பார்த்தவர்கள் ஓவியாவை கழுவி ஊத்த தொடங்கியிருக்கிறார்கள்.
”இளசுகளுக்கு இது தான் பிடிக்கும்” என்ற எண்ணத்தில் மிக மிக கேவலமான ஒரு படமாக ‘90 எம்.எல்’ படத்தை எடுத்திருப்பதாக படம் பார்த்தவர்கள் வசைப்பாடுகிறார்கள். இத்தனைக்கும் இந்த படத்தை இயக்கியிருப்பவர் ஒரு பெண் இயக்குநர்.
படத்தை பார்த்தவர்கள் அனைவரும், ஓவியா இப்படி தரம் தாழ்ந்த படத்தில் நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கவில்லை, இவரை போய் நாம் கொண்டாடினோமே, இதற்கு ஜூலி எவ்வளவோ மேல், இத்தனைக்கும் அவர் தமிழச்சி. அவர் ஒரு போதும் இப்படிப்பட்ட கேவலமான படங்களில் நடிக்க மாட்டார், என்று கமெண்ட் கொடுக்கிறார்கள்.
ஓவியாவை கொண்டாடிய சமூகவலைதளங்கள் கூட தற்போது ஓவியாவை வசைப்பாட தொடங்கியதோடு, இனி ஓவியாவுக்கு சப்போர்ட் பண்ண கூடாது என்றும் பேசி வருகிறார்கள்.
இந்த நிலையில், ஓவியாவை நேரில் பார்ப்பவர்கள், 90 எம்.எல் குறித்து பேசுவதால், அம்மணி ரொம்பவே அப்செட் ஆகியிருக்கிறார்.
படம் ரிலிஸாவதற்கு முன்பு, நான் என்ன நிர்வாணமாகவா நடித்தேன், என் இஷ்ட்டம், நான் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன், நடப்பேன், என்று பேசி வந்த ஓவியா, தற்போது மக்களுக்கு பயந்து வெளியே எங்கும் செல்லாமல் தனது வீட்டுக்குள்ளேயே தன்னை சிறை வைத்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தயாரிப்பாளர் சாந்தோஷ் டி.குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி...
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...