ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘சத்ரு’.
இந்த படத்தின் கதாநாயகனாக கதிர் நடித்துள்ளார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனாக நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு - மகேஷ் முத்துசாமி, இசை - அம்ரிஷ், பாடல்கள் - கபிலன், மதன்கார்க்கி, சொற்கோ, எடிட்டிங் - பிரசன்னா.ஜி.கே, கலை - ராஜா மோகன், ஸ்டன்ட் - விக்கி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - நவீன் நஞ்சுண்டன்.
படம் பற்றி இயக்குநர் நவீன் நஞ்சுண்டன் கூறுகையில், “இந்த படத்தில் கதிர் கேரக்டர்தான் போலீஸ் ஆனால் இது போலீஸ் கதை கிடையாது. சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் நிறைந்த ஒரு பரபரப்பான சம்பவங்கள் தான் படம்.
தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டுவரும் முகமே தெரியாத ஐந்து குற்றவாளிகளை கதிர் 24 மணி நேரத்தில் எப்படி தேடி பிடித்தார் என்பதுதான் படத்தின் திரைக்கதை. படம் முதலிலிருந்து இறுதிவரை விறுவிறுவென இருக்கும்.
மைல்ஸ்டோன் மூவிஸ் G.டில்லிபாபு மார்ச் 8 ம் தேதி படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறார்.” என்றார்.
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...