பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்த ஓவியா நடிப்பில் வெளியாகியுள்ள ‘90 எம்.எல்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி தோல்வியடைந்தது ஒரு பக்கம் இருக்க, அப்படத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவிக்கவும் தொடங்கி விட்டார்கள்.
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ போல ஆபாசமாக படம் எடுத்து கல்லா கட்ட நினைத்த படக்குழுவுக்கு ஏகப்பட்ட அடியாம்.
இதற்கிடையே, படம் பெண்களை தவறான பாதைக்கு இழுத்து செல்லும் விதத்தில் இருப்பதாகவும், கலாச்சார சீரழ்வு என்றும் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், 90 எம்.எல் படத்தில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் நடித்த ஓவியாவை கைது செய்ய வேண்டும், என்று இந்திய தேசிய லீக் கட்சியினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இது பற்றி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் போலீஸ் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது, என்பதில் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
90களின் இறுதியில் மற்றும் 2000களின் தொடக்கத்தில் தனது மென்மையான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்த நடிகர் அபாஸ், பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பி வருகிறார்...
புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...
விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் “சக்தித் திருமகன்”...